Aishwarya Krish: என்னம்மா இப்படி பண்றியேம்மா.. காதலன் தலையில் துப்பாக்கி வைத்த ஐஸ்வர்யா கிருஷ்ணன்!

சென்னை: சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது காதலரின் தலையில் துப்பாக்கியை வைத்து சுடுவது போல போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக பெரிய பரிசுத் தொகையுடன் உருவானது.

ஆனால், முதல் சீசனே செம ஃபேக்காக அந்த நிகழ்ச்சி நடப்பதாக ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்த நிலையில், அந்த நிகழ்ச்சி பெரியளவில் சக்சஸ் ஆகவில்லை.

Survivor Tamil contestant Aishwarya Krishnan placing gun at her lovers head

அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கிருஷ்ணன் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயலக்‌ஷ்மி கடைசியாக டைட்டிலை வென்றார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் செம டஃப்பான போட்டியாளராக கலந்து கொண்ட ஐஸ்வர்யா கிருஷ்ணன் சமீபத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தி இருந்தார்.

நிச்சயம் ஆகிடுச்சு: ஜீ தமிழில் வெளியான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு தனது சாகசங்களால் ரசிகர்களை கவர்ந்த ஃபிட்னஸ் ட்ரெய்னர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் சமீபத்தில் தனக்கு நிச்சயம் ஆகி விட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

Survivor Tamil contestant Aishwarya Krishnan placing gun at her lovers head

அர்பித் என்பவருடன் சமீபத்தில் ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு நிச்சயதார்த்தம் ஆன நிலையில், அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். கூடிய சீக்கிரமே திருமணம் ஆகப் போகும் நிலையில், காதலருடன் அடிக்கடி டேட்டிங் செய்து வரும் ஐஸ்வர்யா கிருஷ்ணன் சமீபத்தில் அவுட்டிங் போன இடத்தில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காதலன் தலையில் துப்பாக்கி வைத்து: அங்கே இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டும் ரொமான்ஸ் செய்துக் கொண்டும் போட்டோக்களை வெளியிட்ட நிலையில், ரசிகர்களை சற்றே ஷாக் ஆக்கும் வகையில் தனது காதலன் தலையில் துப்பாக்கியை வைத்தபடி செம டெரராகவும் ஐஸ்வர்யா கிருஷ்ணன் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார்.

பார்த்து சுட்டுடப் போகுது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டும், என்னங்க கட்டிக்க போற புருஷனை இப்படி கன் பாயின்ட்ல வச்சு கதற விடுறீங்களே என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் போட்டு ஐஸ்வர்யா கிருஷ்ணனை கலாய்த்து வருகின்றனர்.

Survivor Tamil contestant Aishwarya Krishnan placing gun at her lovers head

முகமெல்லாம் பிங்க்: விரைவில் திருமணம் ஆகவுள்ள நிலையில், காதலருடன் கட்டிப்பிடித்து நிற்கும் போட்டோவில் முகமெல்லாம் பிங்க் ஆகிடுச்சே முதல் முறையாக ஐஸ்வர்யா உன்னை இப்படி பார்க்கிறோம் என அவரது தோழிகளும் கமெண்ட் பக்கத்தில் கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X