சத்தியமா வேற லெவல்.. நந்தாவுக்கு கடைசி வரை டஃப் போட்டி கொடுத்த ஐஸ்வர்யா.. பாராட்டும் ரசிகர்கள்!
சென்னை: இந்த வார கேப்டன் டாஸ்க்கில் நந்தாவுக்கு கடைசி வரை செம டஃப் கொடுத்து கெத்து காட்டினார் ஐஸ்வர்யா கிருஷ்ணன் என ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் வேடர்கள் மற்றும் காடர்கள் என இரு பிரிவுகள் உள்ள நிலையில், வாரம் ஒருமுறை கேப்டன் போட்டியும் நடைபெற்று வருகிறது.
காடர்கள் அணி சார்பாக ராம் மற்றும் உமாபதி போட்டியிட்டனர். வேடர்கள் அணியில் நந்தாவும் ஐஸ்வர்யாவும் மோதினர்.

3வது வார கேப்டன்
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் காடர்கள் அணியின் கேப்டனாக காயத்ரி ரெட்டியும் வேடர்கள் அணி தலைவியாக லக்ஷ்மி ப்ரியாவும் தேர்வானார்கள். இரண்டாவது வார கேப்டன் பதவிக்கான போட்டியில் அம்ஜான் கான் மற்றும் விஜயலட்சுமி தேர்வானார்கள். இந்நிலையில், நேற்று 3வது வாரத்திற்கான கேப்டன் போட்டி நடைபெற்றது.

வெயிட் தூக்கணும்
பிக் பாஸ் நிகழ்ச்சி போல ஈஸியான போட்டிகள் சர்வைவர் தமிழில் கிடையாது. கிலோ கணக்கில் வெயிட்டை சுமந்து கொண்டு பதினைந்து நிமிடத்திற்கு மேல் யார் நின்று தாக்கு பிடிக்கிறார்களோ அவர்கள் தான் தலைவராக முடியும் என அர்ஜுன் ஆர்டர் போட்டார்.

கை தூக்கிய ஐஸ்
வேடர்கள் சார்பாக போட்டியிடப் போகும் இருவர் யார் என அர்ஜுன் கேட்டதும் முதல் நபராக ஐஸ்வர்யா கிருஷ்ணன் கை தூக்கினார். நந்தாவும், ஐஸ்வர்யாவும் போட்டியிட முற்பட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்பு தருகிறேன் என அர்ஜுன் சொன்ன போதும் ஐஸ்வர்யா பின் வாங்கவில்லை.

ரியல் சிங்கப்பெண்
நடிகர் நந்தாவுக்கு இணையாக கடைசி வரை டஃப் போட்டி கொடுத்த ஐஸ்வர்யா கிருஷ்ணனை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். ரியல் சிங்கப்பெண் நீங்கதான் ஐஸ்வர்யா என ஏகப்பட்ட மீம்களையும் ட்வீட்களையும் போட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.

செம ஸ்போர்டிவ்
வேடர்கள் அணியின் ஸ்போர்ட்டிவ்வை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த அணிக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். நந்தாவுடன் தோல்வியை தழுவினாலும் ஐஸ்வர்யா கிருஷ்ணன் கடைசி வரை போராடிய போராட்டம் மற்றும் கடைசியில் நந்தாவும் ஐஸ்வர்யாவும் ஹக் செய்து கொண்ட விதம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

ராம் சொதப்பல்
ராம் மற்றும் ஐஸ்வர்யா கிருஷ்ணன் இடையே போட்டி நடைபெற்று இருந்தால் ஐஸ்வர்யா வெற்றி பெற்றிருப்பார் என்றும், கொஞ்ச நேரம் கூட எடையை தூக்கிக் கொண்டு நிற்க முடியாமல் தடுமாறிய ராம் தான் இந்த வாரம் வெளியே போக வேண்டும் என்றும் சர்வைவர் தமிழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











