சர்வைவர் ஷோக்கு வந்து.. என்ன Joke காட்றீங்களா… கோவத்தில் கத்திய அர்ஜூன்!
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அந்த ப்ரோமோவில் அர்ஜூன், ஒருத்தரை நம்பி ஷோ கிடையாது என்று கோவத்தில் கத்துகிறார்.
தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவால் இன்றைய எபிசோடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சரண் ப்ளேயர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில், போன் பயன்படுத்தி தவறு செய்த சரண் வெளியேற்ற நந்தா முடிவு செய்தார். ஆனால் டீம் லீடரான ஐஸ்வர்யாவோ சரண் ஒரு நல்ல ப்ளேயர். சமீபத்திய இம்யூனிட்டி சவாலில் அவருடைய பங்களிப்பு சிறப்பாக இருந்தது. எனவே அவர் இருந்தால் அணிக்கு பலமாக இருக்கும் என்றார்.

காப்பாற்றப்பட்டார்
இதையடுத்து, நடந்த டாஸ்கில் தங்க முத்து அதிர்ஷ்டத்தின் மூலம் சரண் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து, இன்னொருவரை எலிமினேட் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சரண், விஜியை எலிமினேட் செய்தார். இதையடுத்து விஜயலட்சுமி 3வது உலகத்திற்கு போகிறார்.

விஜே பார்வதி வெளியேறினார்
இதையடுத்து 3ம் உலகத்தில் ஏற்கனவே விஜே பார்வதி, காயத்ரி இருந்தனர். இதில் 3வது நபராக விஜி சென்றார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட விஷயங்களை பேசி வருகின்றனர். 3 பேருக்கும் இடையே நடந்த போட்டியில் விஜி பாதுகாக்கப்பட்டார் . பின்னர் பார்வதிக்கும் காயத்ரிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில், சர்வைவரிலிருந்து பார்வதி வெளியேற்றப்பட்டார்.

30வது நாள் ப்ரோமோ
இந்நிலையில், இன்று 30வது நாள் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அர்ஜூன் வேடர்கள் அணியில் ஒரு எலிமினேஷன் நடந்து இருக்கு என்று கூறுகிறார். அப்போது, சரண் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஏதோ பேசுகிறார்கள். இதைப்பார்த்த அர்ஜூன் என்ன பேசுறீங்க என்றார். அதற்கு ஐஸ்வர்யா, சரண் கேமிலிருந்து வெளியேற போவதாக கூறுகிறார். நான் அப்படி பண்ணாதே என்றேன் என்றார்.

ஒருத்தரை நம்பி ஷோ இல்ல
இதையடுத்து பேசும், அர்ஜூன் ஒருத்தரை நம்பி ஷோ கிடையாது சரண், ஏதோ நான் ஷோவிலிருந்து போரேனு பூச்சாண்டி காட்டாதீங்க சரண்... இந்த நிகழ்ச்சியிலிருந்து போகணும்னா தாராளமா போங்க என்கிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவால் சர்வைவர் இன்றைய எபிசோடு மிரட்டலாக இருக்கப்போகிறது என்கிறார்கள் சர்வைவர் ரசிகர்கள்


Click it and Unblock the Notifications











