பொங்கலுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் கலைஞர் டிவி... மக்களை சந்திக்கும் ஜெய்பீம்!

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஜெய்பீம்.

இந்தப் படத்தில் முதல்முறையாக வழக்கறிஞராக நடித்துள்ளார் சூர்யா.

இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிவியிலும் ஒளிபரப்பாக உள்ளது.

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம்

நடிகர் சூர்யா, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த தீபாவளியையொட்டி வெளியான படம் ஜெய் பீம். இந்தப் படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

வழக்கறிஞராக சூர்யா

வழக்கறிஞராக சூர்யா

பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நீதி கிடைக்கும்வகையில் போராடும் வழக்கறிஞராக இந்தப் படத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக அவர் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

 ஐஎம்டிபியில் முதலிடம்

ஐஎம்டிபியில் முதலிடம்

இந்தப் படம் ஐஎம்டிபியில் அதிகமான புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றது. உலக தரத்திலான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தொடர்ந்து பல விருதுகளையும் பெற்று வருகிறது. படத்தில் லிஜோ மோல் ஜோஸ் மற்றும் மணிகண்டனின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பு

கலைஞர் டிவியில் ஒளிபரப்பு

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் தற்போது படத்தின தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது. படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில் அதுகுறித்த பல பிரமோக்களை கலைஞர் டிவி வெளியிட்டு வருகிறது.

வித்தியாசமான பிரமோ

வித்தியாசமான பிரமோ

பராசக்தியில் சில காட்சிகளை வீடியோவாக பகிர்ந்து சமூ நீதியின் குரலாய் விரைவில் என்றும் தெரிவித்துள்ளது. அப்புறம் என்னப்பா அந்த அறிவிப்பை சொல்லிடலாமா, புத்தாண்டு வரை வெயிட் பண்ணுங்க என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Recommended Video

Actor GM Sundar Exclusive Interview About Writer Movie | Writer | Filmibeat Tamil
விரைவில் ஒளிபரப்பு

விரைவில் ஒளிபரப்பு

இதையடுத்து கலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு கொண்டாட்டமாக ஜெய்பீம் வெளியாகுமா அல்லது பொங்கலுக்கு வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல சன்டிவியிலும் பொங்கல் கொண்டாட்டமாக அண்ணாத்த, மாஸ்டர் மற்றும் ராஜவம்சம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X