Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து?.. அப்ப பூர்ணா!

சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் ஒரு வழியா இயல்பு நிலைமைக்கு வந்திருக்கு.

அழகம்மை குடும்பம் மலை மேல இருக்கும் குல தெய்வம் கோயிலுக்கு போறாங்க. அப்போ அவங்க போன வேன் மலை மேலிருந்து கீழே விழுந்துருது.

நல்லவேளை குல தெய்வம் முன்னாடி உட்கார்ந்து என் பிள்ளைங்களை குடுத்துடு இல்லேன்னா என் உயிரை எடுத்துக்கோன்னு பல்லில்பச்சைத் தண்ணி படாம பூஜை செய்யறாங்க. எல்லாருமே உயிர் பிழைச்சு வந்துடறாங்க.

குறி சாமியாடி

குறி சாமியாடி

விபத்தில் சிக்கிய பிள்ளைகள் எல்லாரும் நல்லபடியாக வந்துட்டாங்க.அப்படி அந்தி சாய்வதற்குள் வரலேன்னா என் உயிரை நீ எடுத்துக்கணும். நான் கள்ளி பாலை குடிச்சுருவேன்னு அழகம்மை உட்கார்ந்து பூஜை செய்துகிட்டு இருக்கும்போதே ஜோடி ஜோடியா வந்துடறாங்க. எல்லாரும் சந்தோஷமா இருக்கும்போது, சாமியாடி குறி சொல்ல வர்றார்.

சுதாவால் ஆபத்து

சுதாவால் ஆபத்து

வீட்டின் பெரியவர் மட்டும் இருக்கட்டும், எல்லாரும் வெளியில் போங்கன்னு சாமியாடி சொல்றார். தயக்கமாக எல்லாரும் வெளியில் போக, பழனிச்சாமி வாத்தியார் மட்டும் இப்போது சாமியாடி முன்னால் நிக்கறார். நீ கட்டி காத்து வச்சு இருக்கும் குடும்பத்தில் ஒரு ஓட்டை விழப் போகுதுடா. இதனால் உன் குடும்பமே சிதறிப்போகப் போகுதுன்னு சொல்றார்.

வாத்தியார் கலக்கம்

வாத்தியார் கலக்கம்

வாத்தியார் கலக்கத்தில் என்ன சாமி சொல்றீங்க.. என்னால நம்ப குடியலையேன்னு கேட்கறார். உன் மூத்த மருமகளால் உங்க குடும்பத்துக்கே ஆபத்து. அதோட அறிகுறிதான் உன் மூத்த மகன் கையில அரிவாள் வெட்டு விழுந்துச்சு. அது அவன் கழுத்துக்கு வர இருந்த ஆபத்துன்னு சொல்லுது சாமி. மூத்த மருமகள் சுதாதான் அந்த ஆபத்துன்னு சொல்லுது.

யாரிடமும் சொல்லலை

யாரிடமும் சொல்லலை

பழனிச்சாமி வாத்தியார் சாமியாடி சொன்னது எதையும் வீட்டில் சொல்லலை. அழகு கேட்டபோதும் அவர் சொல்லலை. சாமியிடம் நின்னு அழுதுகிட்டு வேண்டிக்கிட்டு இருக்கும்போது அழகம்மை பார்த்துடறாங்க. என்னன்னு கேட்க, ஒண்ணும் இல்லன்னு சொல்றார். எதுவோ உண்மையை மறைக்கறீங்க... சொல்லணும்னு தோணும்போது சொல்லுங்கன்னு சொல்லிட்டு போறாங்க அழகம்மை.

எப்போதும் பூர்ணாதான் குடும்பத்தை கெடுக்க நினைப்பா ..இப்போ சுதாவால் ஆபத்துன்னு சொல்றாங்களே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X