Azhagu serial: புருஷனை விட ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட் பெரிசா சுதா?

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையின் மூத்த மருமகள் சுதாவும், இளைய மருமகள் பூர்ணாவும் ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட் போட்டுக்கறாங்க.

ஒன்றாக கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் அழகம்மை குடும்பத்தை பிரித்து, திசைக்கு ஒருவராக அலைய வைத்து, வீட்டை விட்டு எல்லாரையும் வெளியேத்துவேன்னு சபதம் போட்டுகிட்டு அழகம்மை வீட்டுக்கு மறுபடியும் சகுந்தலா தேவியின் மகளாக வாழ வந்திருக்கா பூர்ணா.

இதை நடக்க விடமாட்டேன்னு சபதம் போடறா சுதா. சரி, இதை வெளியில் சொல்லாமல் இரு... உனக்கும் எனக்கும் போட்டி. இது ஒரு ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட்னு சொல்லி சுதாவின் வாயை பூர்ணா அடைச்சுடறா.

மதன் காவ்யா

மதன் காவ்யா

வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக காவ்யா மதனை தனது வீட்டுக்கு அனுப்பி வச்சுடறா..அங்கு காவ்யாவை கொடுமப் படுத்தும் பணிகளை பூர்ணா, மதனின் அம்மா சகுந்தலா தேவி செய்யறது தெரியாத மாதிரியே நல்லா வச்சு செய்யறாங்க. அடுத்து சுதா, ரவியை டார்கெட் வச்ச பூர்ணா, ரெண்டு பேருக்கும் நேரம் சரியில்லை. பிரிஞ்சு இருக்கணும்னு ஜோதிடரை பொய் சொல்ல வைக்கறா..சரி ரவியை கிராமத்து வீட்டில் இருப்பத்து ஏழு நாட்கள் வச்சிருந்து பின்னர் அழைச்சுட்டு வரலாம்னு அப்பா பழனிச்சாமி ரவியை அழைச்சுக்கிட்டு போறார்.

மனிதர்கள் பயம்

மனிதர்கள் பயம்

கிராமத்து வீட்டில் ஓரு பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது. நீதான் வேணும் வந்துட்டியான்னு அந்த பெண், ரவியை கேட்டு, அவனின் சட்டையைப் பிடித்து இழுக்க என்ட்ரியே கதி கலங்க வைக்குது. அடுத்து, கோனான்டி பேய் ஒட்ட, இவன் தோப்பை குத்தகைக்கு எடுத்து இருக்கும் பெண்ணிடம் கறாராக நடந்துக்க, அந்த பெண்ணின் உடம்பில் சுதாவின் முதல புருஷன் சுரேந்தர் ஆவி புகுந்து இருப்பது போல அவள் பேச அங்கு ஆரம்பிக்குது ரவிக்கு மன கலக்கம். தொடர்ந்து எல்லாரும் ரவி உன் உடம்பை கொடு, நான் சுதா கூட வாழணும்னு பேச, ரவி மன உளைச்சலுக்கு உள்ளாகி, மன நோயாளி நிலைமைக்கு தள்ளப் படுகிறான்.

ரவியை மன நோயாளி

ரவியை மன நோயாளி

ஒரு வழியாக ரவியை மன நோயாளியாக்கிவிட்டு, பூர்ணாவின் தோழியிடம், கும்பலாக பணம் வாங்குவதை டிடெக்டிவ், சுதாவிடம் ஆதாரத்துடன் காண்பித்து விடுகிறார். இங்கு ஆஸ்பிடலில் ரவி அந்த குரல்கள் மீண்டும் மீண்டும் என்று ஒலிக்க , அவன் பொறுத்துக்க முடியாம ஆஸ்பிடலின் மொட்டை மாடிக்கு போயி, மதில் மேல் ஏறி நின்னு கீழே விழ தயாராகிறான். சுதா மெதுவாக சென்று, அவனின் கையை பிடித்து கீழே இழுத்து விடுகிறாள்,

நர்ஸ் அறிவுரை

நர்ஸ் அறிவுரை

ரவி கீழே குதிக்கத் தயாராக நிற்கும்போது, சுதா ரவி ரவின்னு கத்தறா. அப்போது நர்ஸ் சுதாவுக்கு அறிவுரை சொல்றது நல்லாருக்கு,.அதாவது அப்படி கத்தி கூப்பிடாதீங்க, மெதுவா கூப்பிட்டுக்கிட்டே போயி, அவரை காப்பாத்த முயற்சி செய்ங்க.. ஏற்கனவே பயத்திலிருக்கார். நீங்க கத்தினா உடனே குதிச்சுருவார்னு சொல்றாங்க.இங்கே ஒரு சபாஷ் போடலாம்.

ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட்

ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட்

சரி அதிருக்கட்டும், பூர்ணா குடும்பத்தை கெடுக்க வந்திருக்கான்னு தெரிஞ்சு ,சமாளிச்சுடலாம்னு ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட் போட்டாச்சு. அப்போ கையில் எதுவும் ஆதாரமில்லை, இப்போது ரவியை மன நோயாளியாக்கி இருக்க, கையில் ஆதாரமிருக்கு. இப்போது விழிச்சுக்கறதுதானே புத்திசாலித்தனம்.புருஷனை விடவா ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட் முக்கியம்? அதுவும், இன்னும் விபரீதங்கள் நடக்க இருக்கும் நிலையில் பூர்ணாவின் இந்த போக்கை வளர விடலாமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X