30 வயது பெண்ணை கரெக்ட் பண்ணி கல்யாணம்.. பகீர் கிளப்பிய எஸ்.வி.சேகர்.. வெளியான 2வது வீடியோ

சென்னை: திரையுலகில் 50 வயது நடிகர் 20 பெண்ணுக்கு ஹீரோவாக நடிப்பது எழுதப்பட்ட விதியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் இதேபோன்ற சர்ச்சைகளில் சிக்கி அதற்கு தக்க பதிலடியும் கொடுத்தார். ரஜினி முதல் பாலய்யா வரை இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், அதே கலாச்சாரம் தமிழ் சீரியல்களிலும் தொடங்கியிருப்பது தான் அதிர்ச்சி அளித்திருக்கிறது. சமீபத்தில் பிரபலமான நடிகர் ஒருவர் இளம்பெண் கழுத்தில் தாலி கட்டுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது அதற்கு விளக்கம் அளித்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் எஸ்.வி.சேகர். கே.பாலச்சந்தரின் சிஷ்யனாக இருந்த இவர் தமிழில் பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் இவர், அண்மையில் நயன்தாரா மாதவன் நடித்த டெஸ்ட் படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் சீரியல் நடிகை ஷோபனாவும், எஸ்வி சேகரும் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் காட்டுத் தீபோல் பரவியது. 60 வயது நடிகர் 30 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

sve-sheker-meenakshi-sundaram-serial-2nd-promo-viral

சீரியல் புரோமோ: பின்பு இந்த திருமண காட்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி சுந்தரம் சீரியலுக்கான புரோமோ காட்சிகள் என விளக்கம் அளிக்கப்பட்டது. சமூகவலைதளத்தில் அனைவரது கவனத்தையும் பெற்ற இந்த வீடியோவை பார்த்து எஸ்.வி.சேகரை எல்லோரும் கலாய்க்க தொடங்கிவிட்டனர். படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட எஸ்.வி.சேகர் தமிழகத்தில் பிரபலமான கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகித்தார். பின்னர், பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னம் ஆனார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார். அந்த சீரியல் இவரை மையமாக வைத்துதான் இக்கதை தொடர இருக்கிறது. அதற்கு மீனாட்சி சுந்தரம் என பெயர் வைத்துள்ளனர்.

இளம்பெண்ணுடன் திருமணம்: இதற்கான புரோமோவில் மகன்கள், மருமகள், பேரன், பேத்தி இருக்கும் எஸ்வி சேகர், இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். அந்த புரோமோவின் முதல் காட்சியில் ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி, அண்ணி குழந்தைகள் என அனைவரும் இருக்கின்றனர். பிறகு கணவனும், மனைவியும் கோயிலுக்கு வந்த போது அந்த பெண் கணவரின் தம்பியை குறை கூறி வருகிறார். ஏன் உங்க தம்பி வேலைக்கு போகமாட்டானா என்றும் கேட்கிறார். பின்பு கணவரின் அப்பா எங்கே என்று கேட்கும்போது எஸ்.வி.சேகர் இளம்பெண்ணுக்கு தாலி கட்டுவது போன்ற காட்சி வருகிறது. அப்போது அதை பார்த்த
மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியடைகின்றனர்.

sve-sheker-meenakshi-sundaram-serial-2nd-promo-viral

யார் இந்த ஷோபனா: மீனாட்சி சுந்தரம் சீரியல் அடுத்த வாரம் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடரில் எஸ்.வி.சேகருக்கு ஜோடியாக ஷோபனா நடிக்கிறார். இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தழகு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதைத்தொடர்ந்து பூங்காற்று திரும்புமா சீரியலிலும் லீட் ரோலில் நடிக்க உள்ளார். தற்போது மீனாட்சி சுந்தரம் சீரியலிலும் நடித்துள்ளார் ஷோபனா. இந்த தொடரின் புரோமோ வீடியோ அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களை மக்கள் பார்ப்பார்களோ இல்லையோ எஸ்.வி.சேகருக்காக இந்த சீரியலை காண வாய்ப்புகள் இருக்கிறது.

30 வயது பெண்ணுடன் திருமணம் ஏன்?: முன்னதாக வெளியான புரோமோ வீடியோவை தாண்டி தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோ வீடியோ மேலும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சலூன் கடையில் ஆரம்பிக்கும் முதல் காட்சியில் எஸ்.வி.சேகரிடம் ஒரு இளைஞர் 30 வயது பெண்ணை திருமணம் செய்திருப்பது நியாயமா என கேள்வி கேட்கிறார். அதற்கு, தாலி கட்டலைனா கழுத்தை அறுத்துக்குவேன் என கூறிவிட்டாள். அப்புறம் என்ன பன்ன சொல்ற என எஸ்.வி.சேகர் தெரிவிக்கிறார். பின்னர், ஆட்டோவில் செல்லும் போது நீங்க போற வழி சரியா என கேட்கும் ஆட்டோக்காரரிடம் நீ ரைட்டுல போ, கல்யாணம் பண்ணிக்கலைன்னா விஷம் குடித்து செத்துடுவேன் சொல்லிட்டாப்பா. வேற வழி இல்லாமல் தாலி கட்டிட்டேன் என எஸ்.வி.சேகர் தெரிவிக்கிறார். அதைத்தொடர்ந்து கோயிலில் சாமி கும்பிடும் பெண்களிடமும் எனக்காக அந்த பொண்ணு பழனி வரைக்கும் பாதயாத்திரையாக நடந்து சென்றாள் என்றும் கூறினார்.

sve-sheker-meenakshi-sundaram-serial-2nd-promo-viral

உண்மையான காரணம்: மீனாட்சி சுந்தரம் சீரியல் ஒளிபரப்பாகும் முன்பே கவனத்தை ஈர்த்து வருகிறது. இருப்பினும் 30 வயது பெண்ணை 60 வயது கொண்ட எஸ்.வி.சேகர் ஏன் திருமணம் செய்தார் என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது. இதில், ஊர்களில் வழக்கமாக ஒன்று சொல்வார்கள், பேரன் பேத்தி இருக்கும் வயதில் கல்யாணம் ஒன்றுதான் கேடா என கிண்டல் செய்வார்கள். அதே பாணியில் எஸ்.வி.சேகர் மீனாட்சி சுந்தரம் சீரியலில் 30 வயதான பெண்ணிற்கு தாலி கட்டியிருக்கிறார். இது ஒரு பக்கம் பார்வையாளர்களை ஈர்ப்பது போல் இருந்தாலும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இளம்பெண்ணை ஏன் திருமணம் செய்தார். மீனாட்சியாக நடித்திருக்கும் ஷோபனா என்ன சிக்கலில் தவித்திருப்பார். குடும்பத்தில் ஏற்பட்ட வெறுப்பில் தான் இந்த திருமணமாக இருக்குமா என பலவித சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இருப்பினும் பார்வையாளர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்டுடன் வந்திருப்பதால் கலைஞர் தொலைக்காட்சி ஹிட் சீரியல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சர்ச்சை: சீரியல் காட்சிகள் புரோமாேவாக இருந்தாலும் இதுபோன்ற தற்குறித்தனமாக வரும் சீரியல்கள் நிறுத்தப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். பெண்களை இழிவாக பேசியவரிடம் இருந்து இப்படிப்பட்ட நடிப்பை தான் எதிர்பார்க்க முடியும். நல்ல கதைகள் இருந்தாலும் இவரை நடிக்க அழைக்கமாட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளனர். மேலும், இதேபோன்று ஒரு வயதான பெண் இளைஞரை திருமணம் செய்வது போன்று சீரியல் எடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். எஸ்.வி.சேகர் மீதான தனிப்பட்ட தாக்குதலையும் நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு வயது ஆனாலும் அவர் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால், நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே இன்றைக்கும் ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஆனால், அம்மா, பாட்டி வேடத்திற்கு நடிகைகள் நடிக்க தொடங்குகிறார்கள். அதிலும், நடிகருக்கு 71 வயதாக இருக்கும் தாத்தா ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் குறைந்த வயதில் இருக்கும் நடிகை பாட்டியாக நடிப்பது சினிமாவில் மட்டுமே நடக்கிறது. அதேபோன்று தான் மீனாட்சி சுந்தரம் சீரியல்களிலும் நடக்கிறது என கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X