ஸ்வேத் புராஜெக்ட் முடிஞ்சுது... அடுத்து நிலா புராஜெக்ட் ...சஞ்சய் கள்ளத்தனம்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவுக்கு, நீலாம்பரிக்கும் என்ன தொடர்பு, நிலாவை பெத்தவங்க யாரு, வீரபத்திரன் யாரு, ரேவதி யாரு என்கிற கேள்விகள் எல்லாம் வந்துகொண்டே இருந்தன.
இப்போது எல்லா கேள்விகளுக்கும் ஒரு வழியா விடை கிடைச்ச சமயத்தில், நிலா தன் பெற்றோரை தேடி காதலன் கார்த்திக்குடன் ஹைதராபாத் போயிருந்தா.
எங்கேயும் நீலாம்பரி வீரபத்ரனை அனுப்பி, இவர்கள் இருவருக்கும் பல இன்னல்களை கொடுத்து வந்தாங்க. இப்போது பார்த்தால் நீலாம்பரியின் தம்பி அசோக்குடன் நிலா மாலையும், கழுத்துமாக வந்து இறங்குறா.

அசோக்குக்கும் நிலாவுக்கும்
அசோக்குக்கும் நிலாவுக்கும் நீலாமப்ரி ரிஷப்ஷன் ஏற்பாடு பண்ணி வச்சு இருக்காங்க. அசோக்குக்கும், நிலாவுக்கும் நடந்தது உண்மைக் கல்யாணம் இல்லை.சில உண்மைகளை கண்டுபிடிக்கத்தான் இந்த பொய் கல்யாணம்னு நிலவின் அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்.

கார்த்திக் நிலா
நிலாவை சந்திக்க ரிஷப்ஷன் வீட்டுக்கு கார்த்திக் வந்துடறான்.இருவரும் காதலில் கட்டிக்கொண்டு மெய் மறந்து நிற்க...நீலாம்பரியின் மகன் சஞ்சய் அதை வீடியோ எடுத்துடறான். என் மாமாவை கல்யாணம் செய்துகிட்டு,இங்கு காதலனோடு ரொமான்ஸ் பண்றியான்னு நினைச்சுக்கறான்.

நிலா புராஜெக்ட்
இந்த வீடியோவை வச்சே உன்னை மடக்கறேண்டி...இப்போதுதான் ஸ்வேத் புராஜெக்ட் முடிச்சேன்...அடுத்து நிலா புராஜெக்ட்தான்னு சொல்லிக்கறான். சஞ்சய் வேறு ஒரு பொண்ணுடன் பேசிக்கொண்டு கொஞ்சிக்கொண்டு இருந்ததைப் பார்த்த ஸ்வேதா...சஞ்சய் நாம ரெண்டு பேரும் காதலர்கள் இல்லை.இப்போ புருஷன் பொண்டாட்டிய வாழ ஆரம்பிச்சாச்சுன்னு சொல்ல ஸ்வேதாவின் அம்மா அதிர்ச்சியாகறாங்க

இப்பவே சம்மந்தி
சம்மந்தி இப்பவே சஞ்சய்க்கும், ஸ்வேதாவுக்கும்தான் பின்னாடி கல்யாணம் பண்ணி வைக்கப்போறோம்னு அனவுன்ஸ் பண்ணிருங்க சம்மந்தின்னு ஸ்வேதா அம்மா நீலாம்பரிகிட்ட கெஞ்சி கேட்கறாங்க. பார்த்துக்கலாம் சம்மாந்தி நான் சொல்லிடறேன் நீங்க கவலைப்படாம இருங்கன்னு பொய்யான நம்பிக்கை தர்ராங்க நீலாம்பரி.


Click it and Unblock the Notifications











