குண்டு உடம்பை ஒல்லியாக்கி நடிக்க வரும் சொர்ணமால்யா!

By Mayura Akilan

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாக சொர்ணமால்யா, மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் சினிமா, டிவி என இரண்டையும் விட்டு ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சின்னத்திரையில் தொகுப்பாளராகியிருக்கிறார்.

மீண்டும் சினிமா வாய்ப்புகள் வருவதால் குண்டான உடம்பை குறைத்து ஸ்லிம் ஆகி வருகிறாராம். கிடைப்பது என்னவோ அக்கா, அண்ணி வாய்ப்புகள்தான் என்றாலும் அதையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்றுதான் சொர்ணமால்யா முடிவெடுத்துள்ளார்.

இளமை புதுமை

இளமை புதுமை

சன் தொலைக்காட்சியில் இளமை புதுமை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சொர்ணமால்யா. டிவி தொகுப்பாளினிகளில் இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது.

அலைபாயுதே அக்கா

அலைபாயுதே அக்கா

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதில் ஹீரோயின் அக்காவாக நடித்தார். தொடர்ந்து வந்தவை எல்லாம் தங்கை, தோழி கதாபாத்திரங்கள்தான்.

கவர்ச்சி கலக்கல்

கவர்ச்சி கலக்கல்

எங்கள் அண்ணா, மொழி, வெள்ளித்திரை படங்ளில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, அழகு நிலையம் படங்களில் படு கவர்ச்சியாக நடித்தவர் அதற்கு பிறகு சினிமா, டி.வியை விட்டு ஒதுங்கினார்.

நாககண்ணி

நாககண்ணி

3 வருட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் தங்கம் சீரியலில் நாககண்ணிகையாக நடித்து அச்சுறுத்தினார். கலைஞர் டிவி, விஜய் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார் சொர்ணமால்யா. இப்போது மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

ஸ்லிம் சொர்ணா

ஸ்லிம் சொர்ணா

தனது குண்டான உடம்பை இப்போது குறைத்துள்ள சொர்ணமால்யா இனி தொடர்ந்து அக்கா, அண்ணி வேடங்களில் தீவிரமாக நடிக்க முடிவு செய்திருக்கிறார். வி.டி.வி கணேஷ் தயாரித்து நடிக்கும் இங்க என்ன சொல்லுது படத்திலும், புலிவால் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதிக சினிமா வாய்ப்புகள் வந்தால் சின்னத்திரையை விட்டுவிட முடிவு செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X