Bigg Boss 3 Tamil: பார்ரா.. பிக் பாஸ் தாக்கம் மகளிர் சுய உதவிக் குழு வரை பாய்ஞ்சிருக்கே!

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு விதமான நோக்கத்தில் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை போற்றிப் பேசுவோரும் உண்டு, ஏசி பேசுவோரும் உண்டு.என்றாலும், மக்கள் அன்றாடம் இந்த நிகழ்ச்சியைத் தவறாமல் விரும்பிப் பார்க்கும்படியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மைதான்.

அது மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை அன்றாட வாழ்வியலோடு ஒப்பிட்டு மக்கள் கதை பேசுவதும் இப்போது நிகழ்ந்து வருகிறது. சாலையில், பேருந்துகளில் பெண்களும், ஆண்களும் வயது பேதமின்றி, பிக் பாஸ் பற்றியும், இதுத தொடர்பான வாழ்வியல் தொடர்பு குறித்தும் பேசுவது கண் கூடாக கண்ட உண்மை.

உதவிக்கு குழு பெண்கள்

உதவிக்கு குழு பெண்கள்

மகளிர் சுய உதவிக் குழுவில், குழுவின் தலைவி குழுவில் இருக்கும் பெண்களோடு பேசியதை கேட்க நேர்ந்தது. அப்போது, குழுவின் தலைவி சொல்றாங்க...அம்மாடி இனிமேல் நானே எல்லா வேலையையும் சுமக்கறதா இல்லை. பிக் பாஸ்ல வர்ற மாதிரி, அததுக்கு தனித்தனி குழு அமைச்சு, அந்த குழுக்களுக்கு ஒரு தலைவியை போட்டுடலாம்னு இருக்கேன்னு சொல்றார். அதோடு, இந்த வாரம் கூடும்போது பிக் பாஸ் மாதிரி டீம் பிரிக்க போறேன். நீங்களும் எப்படி பிரிக்கலாம்னு யோசிச்சு வைங்க. இதுதான் என் முடிவுன்னு சொல்றாங்க.

சுய உதவிக்கு குழு

சுய உதவிக்கு குழு

மகளிர் சுய உதவிக் குழு எப்படி செயல்படுகிறது என்று பார்த்தால், வாரா வாரம் ஒரு நாள் குழுவில் உள்ள பெண்கள் கூடுவார்கள். அப்போது அவரவர் மெம்பர் ஷிப்க்கான பணத்தைக் கட்டுவார்கள். இதை வங்கியில் போடுவதும், குழுவிலுள்ள பெண்களுக்கு வங்கியில் லோன் வாங்கித் தருவதும், குழுவில் இருக்கும் பெண்கள் சில சின்ன சின்ன குழுக்களாக பிரிந்து சுய தொழில் செய்வதும், அதை சந்தைப் படுத்துவதும் என்று செயல்படுகிறது.

பிக் பாஸ் தொடர்பு?

பிக் பாஸ் தொடர்பு?

இதில் எங்கே பிக் பாஸுக்கு தொடர்பு வந்தது என்று பார்த்தால், சமையல் டீம், பாத்திரம் தேய்க்கும் டீம், சமையலறை சுத்தம் செய்யும் டீம், பாத் ரூம் சுத்தம் செய்யும் டீம், டாய்லெட் சுத்தம் செய்யும் டீம், லிவிங் ஏரியா சுத்தம் செய்யும் டீம் என்று பிரிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு கேப்டனையும் நியமித்து, பிக் பாஸ் ஹவுஸின் மொத்த கேப்டன், வேலைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிப்பார். இதுபோல திட்டத்தைத்தான் மகளிர் சுய உதவிக்கு குழுவில் செயல்படுத்த போகிறேன் என்று அந்த அம்மணி சொல்கிறார்.

நல்ல வழிக்காட்டியாக

நல்ல வழிக்காட்டியாக

இந்த மகளிர் சுய உதவிக்கு குழு தலைவிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நல்ல வழி காட்டுதலாக இருக்கிறது. இப்படி டிவியில் வரும் நிகழ்ச்சிகளில் நமக்கு எது நல்லதோ அதை எடுத்துக் கொள்வது என்பது எத்தனை பயன்கள் தருகிறது பாருங்கள். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறைய பேர் தூற்றிப் பேசுவதை கேட்டு இருப்போம். ஆனால், இந்த மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவி, எப்படி யோசித்து, தமது குழுவுக்கு பயனுள்ள ஆலோசனை தர நினைக்கிறார் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X