மீண்டும் இந்தியில் இருந்து காப்பியடித்த பிக் பாஸ்: அப்ப கமல் பேச்சுக்கு என்ன மரியாதை?

By Siva

Recommended Video

பிக் பாஸ் 2 பார்க்க ஆரம்பித்து விட்டாரா கமல்?- வீடியோ

சென்னை: கமல் ஹாஸன் வேண்டுகோள் விடுத்தும் மீண்டும் இந்தி பிக் பாஸில் இருந்து காட்சியை காப்பியடித்துள்ளனர்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிட்டானதை அடுத்து தான் தமிழிலும் துவங்கினார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சயில் இருந்து டாஸ்குகள், காட்சிகளை காப்பியடித்து தமிழில் வைக்கிறார்கள்.

இந்த காப்பியடிக்கும் வேலை முதல் சீசனில் இருந்தே நடந்து கொண்டிருக்கிறது.

கமல்

கமல்

பிக் பாஸ் 2 வீட்டில் கமல் ஹாஸன் கோபப்பட்டு கோட்டை கழற்றி வீசியது கூட இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது தான். இந்த சம்பவத்தால் பார்வையாளர்கள் கமல் ஹாஸனை கிண்டல் செய்தார்கள். இனி இந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்க வேண்டாம் என்று விஜய் டிவியிடம் வேண்டுகோள் விடுத்ததாக கமல் ஹாஸன் தெரிவித்தார்.

பிக் பாஸ்

கமல் கேட்டுக் கொண்டதால் இனி இந்தியில் இருந்து காப்பியடிக்க மாட்டார்கள் என்று தான் பார்வையாளர்களும் நினைத்தார்கள். ஆனால் பிக் பாஸ் வழக்கம் போன்று நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டார். கமல் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் இந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடித்து ஒரு காட்சியை வைத்துள்ளார்.

மும்தாஜ்

மும்தாஜ்

பிக் பாஸ் வீட்டிற்குள் மும்தாஜ் அம்மா வந்தபோது அவர் டைனிங் டேபிளில் ஃப்ரீஸ் டாஸ்கில் இருந்தார். உடனே மும்தாஜின் அம்மா அவர் அருகே சென்று அவரை கட்டிப்பிடித்து அழுதார். மும்தாஜோ டாஸ்க் தான் முக்கியம் என்று அமர்ந்தபடியே கண்கலங்கினார். இந்த காட்சி இந்தி பிக் பாஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டது. அங்கு ஷில்பா ஷிண்டே இருந்த இடத்தில் தமிழில் மும்தாஜ்.

ஷில்பா

ஷில்பா

இந்தி பிக் பாஸின் 11வது சீசனில் டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டேவை காப்பியடிப்பதாக மும்தாஜ் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் பிக் பாஸே ஷில்பா போன்று மும்தாஜை நடிக்க வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அப்படி என்றால் மும்தாஜ் ஷில்பாவை காப்பியடிக்கவில்லை, பிக் பாஸ் சொல்லித் தான் அப்படி செய்கிறாரா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X