Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மொக்க போடும் தமிழ் பிக் பாஸ்: ஆரம்பமே அள்ளும் இந்தி பிக் பாஸ்
மும்பை: தமிழ் பிக் பாஸ் மட்டையை தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தி பிக் பாஸ் சிக்ஸர் அடித்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சர்ச்சைக்குரிய ஆட்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வார்கள். இந்த நபரை அழைத்து வந்தால் அமோகமாக பிரச்சனை செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் தான் தேர்வு செய்கிறார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் 12 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.
ஜோடி
இந்தி பிக் பாஸ் வீட்டில் ஒரு வித்தியாசமான காதல் ஜோடி உள்ளது. பஜன் மேஸ்ட்ரோவான அனுப் ஜலோடா தனது மாணவியான ஜஸ்லீன் மாதருவை காதலிப்பதாக அறிவித்தார். அவர்களை அப்படியே அழைத்து வந்து பிக் பாஸ் 12 வீட்டில் தங்க வைத்துள்ளனர். அனூபுக்கு 65 வயதாகிறது. ஜஸ்லீனுக்கு 28 வயது தான்.
சண்டை
அனூப், ஜஸ்லீனை பார்த்த சக போட்டியாளர்கள் அவர்களின் காதலை பற்றி கிண்டல் செய்து கேள்வி எழுப்பினார்கள். இதை பார்த்த ஜஸ்லீன் கோபம் அடைந்து சக போட்டியாளர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார். இப்படி முதல் நாளே சண்டை சச்சரவுடன் செமயாக துவங்கியது. தமிழ் பிக் பாஸில் போட்டியாளர்களால் ஒன்றும் முடியவில்லை என்று முன்னாள் போட்டியாளர்களை அழைத்து வந்தனர்.
|
ஸ்ரீசாந்த்
முதல் நாள் காதல் சண்டையுடன் இனிதே நிறைவுற்றது. இரண்டாவது நாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சும்மா இல்லாமல் பிரச்சனையை கிளப்பினார். இந்த ஸ்ரீசாந்த் என்ன ரொம்ப ஓவரா செய்கிறார், டாஸ்கை ஒழுங்காக செய்வது இல்லை என்று சக போட்டியாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சோமி என்ற போட்டியாளருடன் ஸ்ரீசாந்துக்கு பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் மன்னிப்பு கேட்ட அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவேன் என்று மிரட்டினார்.
சூப்பர்
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சும்மா எதற்கெடுத்தாலும் இந்த ஐஸ்வர்யாவை அழ வைத்து அல்லது பேயாட்டம் போட வைத்து பார்வையாளர்களை கடுப்பேற்றுகிறார்கள். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் ரேஞ்சுக்கு செமயாக பிரச்சனைகள் நடக்கிறது. அங்கு எல்லாம் ஐஸ்வர்யா மாதிரி ஓவர் ஆட்டம் போட்டால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான் திட்டித் தீர்த்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுமை
இந்தி பிக் பாஸ் தமிழ் பிக் பாஸை போன்று ப்ரொமோவில் ஒன்றும் நிகழ்ச்சியில் ஒன்றுமாக காட்டுவது இல்லை. ப்ரொமோவை போன்றே நிகழ்ச்சியும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழில் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் கொடூர மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சும்மா சும்மா இந்த ஐஸ்வர்யா அழுவதை பார்த்தாலே கடுப்பாக உள்ளது. ரூட்டை மாத்துங்க பிக் பாஸ்.