twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. "லெக் பீஸ்" இல்லாத பிரியாணியாக...!

    |

    சென்னை: நடிகர் விஜயகாந்த் நல்ல பண்பாளர், நல்ல மனிதர், அற்புதமான நடிகர். சிறந்த அரசியல்வாதி, அஞ்சா நெஞ்சன் இப்படி இவருக்கான அடையாளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் இல்லாத சினிமா என்பது.. லெக் பீஸ் இல்லாத பிரியாணி போல... வெறிச்சென இருக்கிறது.

    பிரபலங்களை அடிக்கடி வெளியில் பார்த்தால் மட்டுமே மக்களின் மனம் ஆறுதல் அடையும். இல்லாவிட்டால் என்னாயிற்றோ, ஏதாயிற்றோ என்று, சினிமாவிலும், அரசியலிலும் டஃப் காம்படீஷன் கொடுத்த மனிதரைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் இருப்பார்களா?

    அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் இன்னும் மக்களை அவர் சந்திக்கவில்லை. அவரது மனைவி, கேப்டன் இடைத் தேர்தலின் போது மக்களை சந்திப்பார் என்று சொன்னார்கள். ஆவலுடன் இருந்த மக்களுக்கு அப்போதும் ஏமாற்றம்தான்.

    திருநங்கைகளில் வலியை சொல்லும் நாடோடிகள் 2 - சமுத்திரக்கனிதிருநங்கைகளில் வலியை சொல்லும் நாடோடிகள் 2 - சமுத்திரக்கனி

    நடிகர் திலகம்

    நடிகர் திலகம்

    சினிமா உலகத்தில் கேப்டன் என்றால் நிஜமான கேப்டன்தான். இவர் நடிகர் சங்க தலைவராக இருத்த காலத்தில் நடிகர் சங்கத்துக்கு எந்தவித பிரச்சனையும் இருந்ததில்லை. கடனை அடைக்க, கமல், ரஜினியையே துபாய் கலை நிகழ்ச்சி மேடைக்கு ஏற்றினார். நடிகர் சங்கம் அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே பாராட்டும்படி செழிப்பாக இருந்தது.

    ஆலோசனை இல்லை

    ஆலோசனை இல்லை

    பின்னர் அரசியலுக்கு மிகுந்த செல்வாக்குடன் வந்தார். ஜெயித்தும் காண்பித்தார். நம்பி வாக்களித்த விருத்தாசலம் மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்கள் வேண்டும் என்று ஒரு நல்ல ஆலோசகரை வைத்துக்கொண்டு கேட்காமல் தன் இஷ்டத்துக்கு செயல்பட்டாலும், மக்களிடம் அவரது செல்வாக்கு குறையாமல் இருந்தது.

    நன்றாக இருந்தும்

    நன்றாக இருந்தும்

    தன்னிச்சையாக செயல்பட்டும், அவரது செயல்பாடுகள் நன்றாகவே இருந்தது. என்றாலும், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல,இவரது தைரியம் இவருக்கு பலவீனமாகவும் போனது. இதை இவரிடம் தைரியமாக சொல்வதற்கு ஆளில்லாமல் போனதுதான் கொடுமை. டெல்லி தேர்தலில் தைரியமாக நின்று தோற்றுப் போனாலும் பரவாயில்லை என்று தனது அரசியல் தைரியத்தை காண்பித்தவர் அடுத்தடுத்து சறுக்கல்களை சந்தித்தார்.

    எதிர்பார்ப்பில் மக்கள்

    எதிர்பார்ப்பில் மக்கள்

    ரீல் ஹீரோவாக இருந்தவர் மட்டுமல்ல விஜயகாந்தும் ரியல் ஹீரோவும் கூட என்று அவ்வப்போது நிரூபித்தாலும், சட்டப் பேரவையில் ரீல் ஹீரோவாகவும் தன்னை வெளிப்படுத்தினார். அந்த உருட்டலும், மிரட்டலும், நாக்கைத் துருத்தி இவர் பேசியதும் என்று உண்மையில் சட்டப் பேரவையில் பேசுவதற்கு இனி ஒருவர் பிறந்ததுதான் வர வேண்டும். இந்த காட்சியை சினிமா போல ரசித்து ரசித்து திரும்பதிரும்ப செல்போனில் பார்த்தவர்கள் ஏராளம்.

    வெறிச்சோடிய சினிமா

    வெறிச்சோடிய சினிமா

    சினிமாவில் காலைத் தூக்கி அடித்து உதைக்கும் ஒரு சண்டை வகை உண்டு. லெக் பைட் என்பார்கள். அதில் கால் தேர்ந்தவர்.. அதாவது கை தைர்ந்தவர் விஜயகாந்த். இதை பல மாஸ்டர்களும் உறுதிப் படுத்தியுள்ளனர். இதற்காகவே விஜயகாந்த்துக்கு லெக்பைட் நிறைய வைப்பார்கள். ஒரு படத்தில் பொன்னம்பலம் காலை அத்தனை உயரத்தில் தூக்கி விஜயகாந்த்தை அடிப்பார். அதேபோல பதிலுக்கு விஜயகாந்த்தும் காலைத் தூக்கி உதைப்பார். அவ்வளவு திறமையான சண்டைக்காரர் விஜயகாந்த்.. எல்லாம் இப்போது மிஸ் ஆகிறது.

    English summary
    Actor Vijayakant is a good man, a good man and a wonderful actor. The best politician, Anja Njenan, may be labeled as such.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X