தமிழ் புத்தாண்டு படங்கள்: நான் ஈ, துப்பாக்கி, போடா போடி, மாற்றான்

By Mayura Akilan

தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி சன் டிவியில் நான் ஈ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் துப்பாக்கி, போடா போடி என இரண்டு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

விடுமுறை தினங்கள் வந்தாலே தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப்படங்கள் போட்டு ரசிகர்களை வீட்டிற்குள்ளேயே கட்டிப்போட்டு விடுவார்கள். யார் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது என்பதில்தான் போட்டியே.

புது படங்களில் சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதில் தொடங்கும் போட்டி படம் ஒளிபரப்பாகும் வரை தொடரும். ரசிகர்களை மகிழ்விப்பது ஒரு புறம் என்றாலும் விளம்பரங்களை அதிகம் வாங்கி கல்லா கட்டுவது யார் என்பதற்காகத்தான் இந்த போட்டியே. தமிழ் புத்தாண்டிலும் இந்த போட்டி தொடர்கிறது.

சன் டிவியில் ‘நான் ஈ’

சன் டிவியில் ‘நான் ஈ’

நான் ஈ திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களை கூட விரட்டிவிட்ட படம். குட்டீஸ்களுக்கு பிடித்த படமும் கூட. இதை பல கோடி கொடுத்து கைப்பற்றியது சன் டிவி.

சுதீப், சமந்தா, நாணி நடித்த நான் ஈ ஏப்ரல் 14ம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அன்றைய தினம் சன் டிவிக்கு பிறந்த நாள் என்பதால் சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாகிறது.

காலை 11 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படமும், மதியம் 2 மணிக்கு சிலம்பரசன் நடித்த ஒஸ்தி திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

விஜய் நடித்த துப்பாக்கி

விஜய் நடித்த துப்பாக்கி

துப்பாக்கி திரைப்படம் கடந்த தீபாவளியன்று ரிலீஸ் ஆனது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. ராணுவ வீரரான விஜய் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஸ்லீப்பர் செல்களை எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை. தியேட்டரில் பார்க்காதவர்கள் தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் டிவியில் பார்த்து ரசிக்கலாம்.

எஸ்.டி.ஆர் நடித்த போடா போடி

எஸ்.டி.ஆர் நடித்த போடா போடி

சிலம்பரசன், வரலட்சுமி நடித்த போடா போடி படமும் தீபாவளி ரிலீஸ் படம்தான். இளமை துள்ளும் இந்த படம் காதலும் நடனமும் இணைந்த கலவை. லண்டனை லைவ் ஆக காட்டிய படம் இது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

யு டுயூப்பில் போடப்போறங்களாம்

யு டுயூப்பில் போடப்போறங்களாம்

துப்பாக்கி, போடா போடி ஆகிய இரண்டு திரைப்படங்களையும் விஜய் டிவியில் ஒளிபரப்பிய கையோடு யு டுயூப்பில் வெளியிடப்போகிறார்களாம்.

ஜெயா டிவியில் மாற்றான்

ஜெயா டிவியில் மாற்றான்

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த மாற்றான் திரைப்படம் ஜெயாடிவியில் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஜீ தமிழ் சேனலில் மாலை 4 மணிக்கு ஸ்ரீ காந்த், ஜனனி ஐயர் நடித்த பாகன் திரைப்படமும், பாலிமர் டிவியில் மதியம் 2.30 மணிக்கு ரஜினிகாந்த் மீனா நடித்த முத்து திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X