»   »  தமிழ் புத்தாண்டுக்கு சைத்தான்... றெக்க - ஜீ தமிழ் டிவியில் ரசிங்க மக்களே!

தமிழ் புத்தாண்டுக்கு சைத்தான்... றெக்க - ஜீ தமிழ் டிவியில் ரசிங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சி உற்சாகமான மற்றும் சமூகம் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளை சின்னத் திரையில் ஒளிபரப்ப உள்ளது.
சிறப்பு திரைப்படங்களாக றெக்க, சைத்தான் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும், புத்தம் புதிய திரைப்படங்களையும் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புகின்றன.


சிவலிங்கா

சிவலிங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை 9 மணிக்கு "சிவலிங்கா எக்ஸ்க்ளுசிவ்" எனும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. நடிகை ரித்திகா சிங், காமெடி நடிகர் வடிவேலு, இயக்குனர் பி. வாசு மற்றும் நடிகர் சக்தி வாசு ஆகியோர் இப்படத்தை பற்றிய ருசிகரத் தகவல்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ள உள்ளனர்.


ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

காலை 10 மணிக்கு தமிழகத்தின் இன்றைய மிக முக்கிய பிரச்சனையான விவசாயிகளின் நிலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி "விவசாயியின் உயிர் காப்போம் - சொல்லாதே செய்" ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அனைத்து பிரிவு மக்களும் ஒன்றிணைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு குரல் கொடுக்கவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் ஆகும்
றெக்க

றெக்க

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு மக்கள் நாயகன் விஜய் சேதுபதி மற்றும் லட்சுமி மேனன் நடித்த "றெக்க" திரைப்படம், ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.


ஜீ தமிழ் கொண்டாட்டம்

ஜீ தமிழ் கொண்டாட்டம்

பிற்பகல் 2 மணிக்கு ஜீ நட்சத்திர கொண்டாட்டம் எனும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஜீ தமிழ் குடும்பத்தினர் பங்கேற்கும் கலகலப்பான நிகழ்ச்சியாக இது அமைய உள்ளது.


சைத்தான்

சைத்தான்

பிற்பகல் 4 மணிக்கு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, 2016 ஆம் ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமான 'சைத்தான்' ஒளிபரப்பாக உள்ளது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருந்ததி நாயர், ஒய்.ஜி. மகேந்திரன், சாருஹாசன் மற்றும் கிட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை, ஜீ தமிழின் வண்ணமயமான நிகழ்ச்சிகளை தமிழ் புத்தாண்டுடன் கொண்டாடுங்கள் என்று தொலைக்காட்சி நிலையத்தார் கூறியுள்ளனர்.


English summary
Zee Tamil TV has planned to premiere the recent box office hit movie Saithan on Tamil New Year April 14,2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil