படங்கள் தோல்வியை தழுவின… வீட்டை விற்று பணம் அனுப்பிய அம்மா... சர்வைவரில் அர்ஜூன் நெகிழ்ச்சி !
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் மிகவும் சுவாரசியமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
சர்வைவர் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அர்ஜூன் தனது வாழ்க்கையில் பணம் இன்றி கஷ்டப்பட்ட நாட்களை பற்றி போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

சர்வைவர்
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் காடர்கள் மற்றும் வேடர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய எபிசோடில் புதிய தலைவரை தேர்வு செய்ய போட்டிகள் நடைபெறுகிறது. போட்டியாளர்கள் அதிக எடையை தோளில் தாங்க வேண்டும். அதில் அதிக நேரம் யார் தோளில் அதிக எடையை தாங்கி இருக்கிறார்களோ அவர்களே புதியதலைவராக தேர்வு செய்யப்படுவர்.

நந்தா தலைவர்
இந்த போட்டியில், காடர்கள் அணியில் இருந்து தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதியும் ராமும் கலந்து கொண்டனர். வேடர்கள் குழுவிலிருந்து நந்தா மற்றும் ஐஸ்வர்யா கலந்து கொண்டனர். ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு இடையே எடை கூட்டப்பட்டுக்கொண்டே இருந்தது. இதில் ஐஸ்வர்யா எடையை தூக்க முடியாமல் விலகினார். வேடர்கள் அணியில் இந்த வாரத் தலைவராக நந்தா ஜெயித்தார்.

உமாபதி தலைவர்
அதே போல, காடர்கள் அணியில் 25 கிலோ வரை எடை கூட்டப்பட்டுக் கொண்டே இருந்த போது போட்டியை தொடர முடியாமல் ராம் கீழே போட்டுவிட்டார். இதனால், உமாபதி காடர்கள் அணித் தலைவரானார். பல சுவாரசியமான நகர்வுகளுடன் நேற்றைய ஷோ முடிந்தது.

இன்றைய ப்ரோமோ
இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில், ஆக்சன் கிங் அர்ஜூன் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தான் சந்தித்த இன்னல்களை சர்வைவர் போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

அர்ஜூன் நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் எனக்கு மிகக்பெரிய வரவேற்பு இருந்தது, ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கே தெரியாமல் எனது படங்கள் தோல்வியை தழுவின. சரினு நானே படத்தை இயக்கி தயாரிக்க ஆரம்பிச்சேன். க்ளைமாக்ஸ் சண்டைகாட்சியை ஆரம்பிக்கணும் பணம் இல்லை, என்கிட்ட ஒரே ஒரு சொத்துதான் இருந்தது அதையும் விற்றுவிட்டேன். என்ன பண்றதுனு தெரியல. எங்க அம்மாவுக்கு பெங்களுரில் ஒரு சின்ன வீடு இருந்தது இதை விற்று என் அம்மா எனக்கு பணம் அனுப்பினாங்க என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











