twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Tamil selvi serial: அண்ணான்னு கூப்பிட்டிருக்கலாமே தமிழ்செல்வி.. அது என்ன மாமா?

    |

    சென்னை: சன் டிவியின் தமிழ்செல்வி சீரியல் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு படிக்க புறப்படும் மாணவிகளுக்கு ஒரு பாடம் கற்பிப்பதா இருக்கு. தன்னம்பிக்கை தருவதாகவும் இருக்கு.

    அதனால, கதையை கவனமாக கையாளும் திறமை மிக்கவராக இயக்குநர் இருக்க வேண்டும். காரணம் சப்ஜெக்ட் அப்படி. வெளியூர் படிக்கப் புறப்பட்டு ஏதேதோ ஆகி, எப்படி எப்படியோ பிள்ளைகளை இழந்த உண்மை சம்பவங்களை அறிந்து இருக்கிறோம்.

    இந்த சம்பவங்களுக்கான பதில் தருகிற மாதிரி கதையை நகர்த்தியாக வேண்டும்.

    'இவங்க எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவங்க'... அதிமுக, பாஜகவை செமையா கலாய்த்த பிரபல இயக்குனர்! 'இவங்க எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவங்க'... அதிமுக, பாஜகவை செமையா கலாய்த்த பிரபல இயக்குனர்!

    தனியாக கடைக்கு

    தனியாக கடைக்கு

    முதலில் தமிழ்செல்வி மாதிரி ஒரு கிராமத்து பொண்ணு தனியாக கடைக்கு செல்வதே தப்பு. அதுவும் படிக்க புத்தகங்கள் வாங்க போறா. காலேஜ் நூலகம் எதுக்கு இருக்குன்னு தெரியலை. ரவுடிகளிடம் மாட்டிக்கறா...அவர்களை ஹேண்டில் பண்ண தெரியாமல் தப்பிச்சு ஓடிக்கிட்டு இருக்கும்போது ரவுடிகள் துப்பட்டாவை உருவ, சுடிதார் கிழிஞ்சுருது. புத்தகத்தை வச்சு மறைச்சுக்கிட்டு ஓடி வர்றா.

    முதல்நாள் செல்ஃபி

    முதல்நாள் செல்ஃபி

    கல்லூரியில் சேர வந்த முதல் நாள், நண்பர்களுடன் சேர்ந்து சவாலுக்காக இந்த பொண்ணுகூட செல்ஃபி எடுத்துகிட்டவன் நிக்கறான். அவனைக் கண்டதும் ஓடி வந்த தமிழ்செல்வி, இப்போ வாங்கடா பார்ப்போம். இவர்தான் என் லவ்வர்... லவ்வரை பார்த்ததும் பயந்து நிக்கிறீங்களா... மாமா நம்ம செல்ஃபி எடுத்துகிட்டோமே அதைக் காமிங்க. அப்போவாவது நம்பறாங்களா பார்க்கலாம் .போனை குடுங்க மாமான்னு போனை வாங்கி காமிக்கறா. ரவுடிங்க போறானுங்க.

    மீண்டும் விடாமல்

    மீண்டும் விடாமல்

    அதோடு விடாமல்.. என் மாமா போலீஸ் இன்ஸ்பெக்டர்.மூணு வருஷத்துல நாலு என்கவுண்டர் போட்டு இருக்கார். என்ன இன்னும் நம்பலையான்னு கேட்கறா... இவனும் எதுக்கு துரத்திக்கிட்டு வந்தீங்கன்னு கேட்கறான். அது ஒண்ணுமில்லை சார்... டீ கொட்டிருச்சு...கோவத்துல சும்மா திட்டினேன்னு சொல்றான். துரத்திக்கிட்டு வந்ததை நான் பார்த்தேன்னு இவன் சொல்றான்.

    முன்னாடி ஓடினாங்க

    முன்னாடி ஓடினாங்க

    நாங்க துரத்தலை சார் அவங்கதான் எங்க முன்னாடி ஓடிக்கிட்டு இருந்தாங்கன்னு இன்னொருத்தன் சொல்றான்.அவனுங்க போயிட்டானுங்கன்னு தெரிஞ்ச உடனே.. நன்றி பிரதர்னு சொல்றா தமிழ்செல்வி. இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே... அவன் ஏற்கனவே தெரிஞ்சவன்..அதனால பிரதர்னு சொன்னா என்ன... இதுவும் சரியான அணுகுமுறை இல்லை. அதுவும் கிராமத்திலிருந்து வந்த பொண்ணுக்கு எடுத்த உடனே வாயில் அண்ணான்னுதான் வரும். மாமான்னு வரவே வராது...

    பெரும் தவறு

    பெரும் தவறு

    கிராமத்து பொண்ணு நகரத்துக்கு படிக்கப் போகும் கதை பார்த்து எடுங்க... அவ்ளோ தூரத்துக்கு கடைக்கு தனியா போனதே பெரும் தவறு. போகாமல் வெளியில் கடைக்கு போறா. கல்லூரி சுலபமாக மாணவிகளை வெளியில் விட்டுவிடுமா? ரவுடிகள் இப்படி அப்பட்டமாக ஒரு பெண்ணை ரோட்டில் துரத்தி ஓடுவதை மக்கள் பார்த்துக்கிட்டு சும்மாவா இருப்பாங்க...

    English summary
    Sun TV's Thamilselvi Serial will teach a lesson to students traveling from the village to the city. Be confident.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X