Srithika - Aryan: கர்ப்பமான நாதஸ்வரம் ஹீரோயின் ஸ்ரித்திகா.. குவியும் வாழ்த்து!

சென்னை: நாதஸ்வரம் சீரியலில் மலர்க்கொடியாக நடித்து பிரபலமான நடிகை ஸ்ரிதிகா சீரியல் நடிகர் எஸ்.எஸ்.ஆர் ஆர்யனை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற நிலையில், தற்போது குட்நியூஸ் ஒன்றை எஸ்.எஸ்.ஆர் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் நாதஸ்வரம் சீரியல். திருமுருகன் எழுதி இயக்கிய இந்த சீரியலில் திருமுருகன் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரிதிகா மலர்க்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானர். இந்த சீரியலுக்கு முன்பே கலசம், கோகுலத்தில் சீதை என பல சீரியலில் நடித்திருந்தாலும், நாதஸ்வரம் சீரியல் தான் இவருக்கு பெயரை பெற்றுக்கொண்டுத்தது.

shrithika ssr aryan pregnent

நாதஸ்வரம் சீரியல் நடிகை: இவர் சீரியல் மட்டுமில்லாமல், பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ, வேங்கை, வெண்ணிலா கபடிகுழு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிசியாக இருந்த ஸ்ரிதிகா, 2019ஆம் ஆண்டு சனீஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பின் விவாகரத்து பெற்றார். இதையடுத்து, மகராசி சீரியல் மூலம் பிரபலமான எஸ்.எஸ். ஆர். ஆர்யனை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குட் நியூஸ்: இந்நிலையில், நடிகர் எஸ்.எஸ்.ஆர் ஆர்யன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரிய பொறுப்பு வருகிறது. எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவுடன் எங்கள் பயணம் தொடங்கியது. எனவே நாங்கள் இப்போது பெற்றோராகி இருக்கிறோம். நாங்கள் வாழ்வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுதிக்குள் நுழைகிறோம். எல்லாம் வல்ல இறைவனின் அனைத்து ஆசீர்வாதங்களுடன் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவிக்கிறோம். எங்களைப் பின்தொடர மறக்காதீர்கள், ஏனெனில் நாங்கள் எங்கள் சமூக ஊடகக் குடும்பத்திடமிருந்து நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் தாயாகப்போகும் நடிகை ஸ்ரிதிகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.எஸ்.ஆர் ஆர்யன், பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேர் ஆவார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் லீட் ரோலில் நடித்திருந்தார். இவருக்கு ஏற்கனவே சின்னத்திரை நடிகையான நிவேதிதா பங்கஜை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஒத்துவராததால் அவரை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X