ஆனந்த கண்ணனின் மனைவியுடனான அழகிய நினைவுகள்…. பழைய வீடியோவால் கலங்கிய ரசிகர்கள் !

சென்னை : சன் மியூசிக் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திடீர் என புற்றுநோய் காரணமாக, உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆனந்த கண்ணன் அவருடைய மனைவியுடன் வெளிநாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை அவருடைய ரசிகர்கள் வைரலாக்கி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் கணவன் மனைவி இருவரும் கதை பேசி அழகாக சிரித்து விளையாடுகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் போதும் மனம் கலங்குகிறது.

ஆனந்த கண்ணன்

ஆனந்த கண்ணன்

90களில் அனைவருக்கும் பிடித்த விஜேவாக இருந்தவர் ஆனந்த கண்ணன். எப்போதும் சிரித்த முகத்துடன், கலப்பாக பேசுவது இவரின் தனி ஸ்டைல். இந்த ஸ்டைலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமான ரசிகர்கள். குறிப்பாக இளம் பெண்களின் கனவு கண்ணாக இருந்தார் ஆனந்த கண்ணன். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் இவருக்கு இருந்த பெண் ரசிகைகள் தான்.

அழகான தமிழ்

அழகான தமிழ்

சிங்கப்பூர் தமிழரான இவர், சிங்கப்பூரில் ஒளிபரப்பாகி வந்த வசந்தம் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். சரளமாக தமிழ் பேசுவதால் ரேடியோ தொகுப்பாளராக ஆசையில் சென்னை வந்தார். இதே போல ரேடியோ ஜாக்கியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவரின் வசிகர பேச்சும் குரலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

இதையடுத்து, சன் மியூசிக் தொடங்கப்பட்ட புதிதில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஆனந்த கண்ணனுக்கு கிடைத்தது. மிக விரைவிலேயே இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. இதையடுத்து, விக்ரமாதித்தன் என்ற சீரியல்களிலும் நடித்தார்.

சரோஜா படத்தில்

சரோஜா படத்தில்

சின்னத்திரையில் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற ஆனந்த கண்ணன், வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

தமிழ் கலாச்சாரம்

சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு இவருக்கு வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் பழையபடி சிங்கப்பூர் சேனலான வசந்தம் டிவியிலே தனது பணியைத் தொடங்க சென்றார். மேலும், இவர், தனியார் கலை அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் கிராமிய கலைகளை சிங்கப்பூர் இளைஞர்களுக்கு கற்பித்து வந்துள்ளார்.

உயிரிழந்தார்

உயிரிழந்தார்

கடந்த சில ஆண்டுகளான புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரின் மறைவு திரைத்துறையினரையும் அவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

உருக்கமான வீடியோ

இந்நிலையில் ஆனந்த கண்ணன் தனது மனைவியுடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த வீடியோ ஒன்று அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். அதில், அவரது மனைவி ராணி, அழகாக பாட்டு பாடியும், இரண்டு ஆடு பற்றிய கதையை ரசித்து ரசித்து கூறுகிறார். உடன் இருந்த ஆனந்த கண்ணன் அதனை ரசித்து கேட்டு மகிழ்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆனந்த கண்ணன் குறித்து உருக்கமான கமெண்டுகளை பதிவு செய்து கண்ணீர் விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X