சிசிஎல் கிரிக்கெட்: சின்னத்திரை நடிகர்களின் அணிக்கு பெயர் "'சென்னை பிரேவ் பவுன்சர்"
சென்னை: சினிமா நட்சத்திரங்கள் மோதும் சிசிஎல் கிரிக்கெட் போன்று சின்னத்திரை நடிகர்கள் மோதும் கிரிக்கெட் லீக் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழக சின்னத்திரை கிரிக்கெட் அணிக்கு சென்னை பிரேவ் பவுன்சர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 16 சின்னத்திரை நடிகர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தோடு கடுமையான பயிற்சியும் செய்து வருகின்றனர் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

தமிழக டிவி நட்சத்திரங்கள்
ஆந்திரா, கேரளாவில் ஏற்கெனவே சின்னத்திரை கிரிக்கெட் அணிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் சின்னத்திரை நட்சத்திரங்கள் இப்போதுதான் அணியைத் துவக்கி உள்ளனர்.

சென்னை பிரேவ் பவுன்சர்
இந்த அணியின் கேப்டன் பரத், மொக்க மகி. ஸ்ரவன், ஆதித்யா, பாலா, கோபி, ஐயப்பன்,விக்கி குகன், நவீந்தர், ராஜ்குமார், உதய்,விஜய், ஷாம், சசிகுமார் கோபி, உள்ளிட்ட 16 சின்னத்திரை நட்சத்திரங்கள் இந்த சென்னை பிரேவ் பவுன்சர் அணியில் உள்ளனர்.

ஜெயிப்போம்ல
"எங்கள் அணி இப்போது கடுமையான பயிற்சியில் இருக்கிறது. இனி மற்ற மாநில சின்னத்திரை அணியுடன் விளையாடி ஜெயிப்போம். வெளிநாடுகளுக்கும் சென்று விளையாடுவோம் என்கிறார் அணியின் கேப்டன் பரத்.

4 மாநில நட்சத்திரங்கள்
-
விரைவில் 4 மாநில சின்னத்திரை நடிகர்கள் மோதும் லீக் போட்டிகள் நடக்க இருக்கிறது.

நிச்சயம் புகழ்பெறுவோம்
சென்னை ரெய்னோஸ் என்ற தமிழ் சினிமா நட்சத்திர அணி போன்று சென்னை பிரேவ் பவுன்சர் அணியும் புகழ் பெறும் என்றும் கூறியுள்ளார் கேப்டன் பரத்.


Click it and Unblock the Notifications











