அதிரடியான இந்த வார டாப் 10 சீரியல்கள்.. அசைக்க முடியாத இடத்தில் கயல்.. போட்டியில் விஜய் டிவி சீரியல்
சென்னை: முன்னனி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 33 வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
அதில் கடந்த வாரத்தில் இருந்த நிலையை விட இந்த வாரம் பல சீரியல்கள் எதிர்பாராத இடங்களை பிடித்திருக்கிறது.

இந்த தகவல்கள் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பியின் அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.
1, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தொடர்ச்சியாக சில வாரங்களாகவே முதலிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 12.87 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.
2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வாரம் 10. 53 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம்
10.34 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.92 புள்ளிகளைப் பற்றி நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது.
5, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்தது. அதேபோல இந்த வரமும் 9.16 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
6, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்தது. அதேபோல இந்த வாரமும் ஆறாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த வாரத்தில் 8. 84 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

7, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.39 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது.
8, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரத்தில் 7. 14 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
9, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரத்தில் 7. 12 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஏழாவது இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
10, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரத்தில் 6.78 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











