For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சித்தி சாரதா... மெட்டி ஒலி சரோ... கோலங்கள் அபி... இவர்களை மறக்க முடியுமா?

  By Mayura Akilan
  |

  சென்னை: 1975களில் ஹீரோக்களாக நடித்த ரஜினியும் கமலும் 2015லும் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக நடித்து மகள் வயது ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்க அப்போது ஹீரோயின்களாக அறிமுகமானவர்கள் அம்மாவாகவும், பாட்டியாகவும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்களும் ஹீரோயின்களாக நடிப்போம் சின்ன வயது ஹீரோக்களுடன் ஜோடி போடுவோம் என்று பல நடிகைகள் மாத்தி யோசித்ததன் விளைவுதான் டிவி சீரியல் தயாரிக்க காரணமாக அமைந்தது.

  நடிகை ரேவதி தனது கணவர் சுரேஷ் மேனனுடன் இணைந்து இயக்கிய பெண் சீரியல், இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய சீரியர்கள், ஏவிஎம் தயாரித்த சீரியல்கள் எல்லாம் டிடியிலும் அதனைத் தொடர்ந்து சன் டிவியிலும் சக்கை போடு போட்டன. 13 வாரங்கள் மட்டுமே ஒளிபரப்பான சீரியல்கள் இப்போது ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி அழுகாச்சி காவியமாகிவிட்டன.

  Tamil TV serials Female centric

  ராதிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் சினிமாவில் ஹீரோயின்களாக அறிமுகமாகி தற்போது அம்மா நடிகைகளாக மாறிய பின்னரும் சீரியல்களில் ஹீரோயின்கள்தான். ஐபிஎஸ் அதிகாரியாகவோ, ஐஏஎஸ் அதிகாரியாகவே வக்கீலாகவே வேஷம் கட்டி வருகின்றனர். அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களுக்காகவே சீன்கள் மாறும். இது ஹீரோயினியிசம். ஹீரோ, ஹீரோயின், வில்லி என சீரியல்களில் எல்லாமே பெண்களின் ஆதிக்கம்தான்.

  சன் டிவிக்கு முன்னாடியே பொதிகை டிவியில் மெகா சீரியல் ஒளிபரப்பானது. எத்தனை மனிதர்கள், விழுந்துகள், ஒரு பெண்ணின் கதை சீரியல் எல்லாம் மறக்கவே முடியாது.

  Tamil TV serials Female centric

  ஞாயிறு காலையில் எஸ்.வி.சேகர் நாடகத்தோடுதான் பலருக்கும் விடியும். இன்றைக்கு சீரியல்களில் நடிக்கும் மௌலி அப்போது டிடியில் இயக்கிய சீரியல்கள் செம. சோவின் வந்தேமாதரம், கிரேஸிமோகனின் நாடகங்கள், காத்தாடி ராமமூர்த்தி நாடகங்கள் என காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

  டிடியில் பாலச்சந்தரின் ரயில் சிநேகம்... ரயில் சிநேகம் என்ற பாடல் பலரால் முணுமுணுக்கப்பட்ட பாடல். சன் டிவியில் ஒளிபரப்பான கையளவு கையளவு பாடலை பலரும் பாடக்கேட்டிருப்போம். நாகா இயக்கிய மர்மதேசத்தின் திரில் பலராலும் பாராட்டப்பட்டது. இப்போது வசந்த் டிவியில் மறுஒலிபரப்பு செய்தாலும் ரசிகர்கள் விடாமல் பார்க்கிறார்கள்.

  ஏவிஎம் நிறுவனத்தினரின் நிம்மதி உங்கள் சாய்ஸ், வாழ்க்கை, சொர்க்கம், என பல சீரியல்களை பிற்பகலில் ஒளிபரப்பி இல்லத்தரசிகளை கவர்ந்தார்கள்.

  Tamil TV serials Female centric

  சின்னத்திரையில் மறுபிறவியில் நடித்த ராதிகா சித்தி சீரியல் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்தார். சன்டிவியில் ராடான் டிவி நிறுவனம் மூலம் சித்தியாக இரட்டை வேடத்தில் நடிக்கத் தொடங்கிய ராதிகா, 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் வாணி ராணியாக நடித்து வருகிறார்.

  2000 தொடங்கி, இன்று வரை உணர்வுகளின் குவியலாய் பெண்களையும், ஆண்களையும் பாரபட்சமில்லாமல் முட்டாள் பெட்டியின் முன்பு கட்டிப் போட்டிருக்கும் சீரியல்கள் ஏராளம்.

  Tamil TV serials Female centric

  அன்றைக்கு மெட்டிஒலி சரோ, சித்தி சாரதா, கோலங்கள் அபி, லட்சுமி மீனா என பலரும் இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்கள். இன்னமும் பல பெயர்களில் பல சேனல்களில் வந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சீரியல்களின் டைட்டில் பாடல்களை கேட்டு சாப்பிட்ட குழந்தைகள் இன்றைக்கு அதை நினைத்து மலரும் நினைவுகளில் மூழ்குவார்கள்.

  ஆன்ட்டி நடிகைகள் ஹீரோயின்களாக நடித்து வந்தாலும் தென்றல் துளசி, தெய்வமகள் சத்யா, பாசமலர் தாமரை, குலதெய்வம் அலமு, கல்யாணம் முதல் காதல்வரை பிரியா. சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா, ரக்ஷிதா என பல இளம் ஹீரோயின்கள் புதிதாக அழுது கொண்டிருக்கின்றனர்.

  சன்டிவிக்கு போட்டியாக ராஜ் டிவி தொடங்கி இன்று விஜய் டிவி, ஜீ தமிழ், பாலிமர், புதுயுகம், வேந்தர் டிவி என பல சேனல்கள் தொடங்கி ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டனர். இந்தி டப்பிங் சீரியல்கள் ஹிட் அடிக்கவே, ஹிந்தி ஹீரோயின்களின் அழகு, சீரியல்களின் ரிச் லுக் என ரசிகர்களை வேறு ரசனைக்கு மாற்றி வருகிறது.

  வட இந்திய டப்பிங் சீரியல்களுக்கு எதிராக தமிழக சின்னத்திரைக் கலைஞர்கள் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும் போராடிக்கும் ஒரே மாதிரியான சீரியல்களில் கவனம் செலுத்தாமல் ரூட்டை மாற்றினால் மட்டுமே தமிழ் சீரியல்கள் இனி பிழைக்க முடியும் என்று ஸ்லாட் கொடுக்கும் சேனல் ஓனர்கள் கூறிவிட்டதால் புதுவிதமாக யோசிக்கத் தொடங்கிவிட்டார்களாம் சீரியல் தயாரிப்பாளர்கள்.

  இனியாவது தரமான சீரியல்கள் ஒளிபரப்பாகுமா பார்க்கலாம்.

  English summary
  Most Tamil TV Serials are catered for housewives or middle aged women which doesn't interest anyone else, but quite popular among the target audience.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X