twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புவனேஸ்வரி செத்துட்டாளா?... பேயா வர்றா பாஸ்... யு டுயூப்பில் சீரியல் பார்த்து டிஸ்கஸ் பண்றாங்கப்பா!

    |

    காயத்ரிக்கு என்ன ஆச்சு அவ புருஷன் வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டானா? புவனேஸ்வரி பேய் இன்னும் என்ன வெல்லாம் அட்டகாசம் செய்யுமோ? விக்கிக்கு கொடுத்த ஸ்லோபாய்சன் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சே போன வாரம் என்ன ஆச்சோ பார்க்க முடியாம போயிருச்சே என்று கவலைப்படுபவர்கள் ஏராளம்.

    உறவினர்கள் வீட்டு விசேசம் என்றால் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு போய் தலையை காட்டி விட்டு வந்து சீரியல் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் இல்லத்தரசிகள். எல்லாம் கண்டினியூனிட்டிக்காகத்தான். ஒரு நாள் பார்க்காமல் விட்டாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது ஆனாலும் சீரியலை விழுந்து விழுந்து பார்ப்பார்கள்.

    ஒரு சீரியலில் மாடியில் இருந்து விழுந்த ஒரு கர்ப்பிணியின் குழந்தைக்கு தலையில் அடிபட்டு விட்டது. வளைகாப்பு செய்ய வேண்டும் என்று ஏற்பாடு நடக்கும் நேரத்தில் இப்படி நடந்து விட்டதே என்று கடந்த திங்கட்கிழமை அழ ஆரம்பித்த அந்த பெண் சனிக்கிழமை மதியம் வரை ஒரு வார காலம் பிழிய பிழிய அழுது கொண்டே இருந்ததுதான் சோகம்.

    இப்போதெல்லாம் டிவி சீரியல்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல யு டுயூப்பிலும் கூட சுடச்சுட அனைத்து டிவி சேனல்களின் சீரியல்களையும் பார்க்க முடிகிறது. இந்த சீரியல்களிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்குத்தான் பார்வையாளர்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றன புள்ளிவிபரங்கள். மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அதிக அளவில் யுடுயூப் மூலம் சீரியல்களைப் பார்த்து ரசிக்கின்றனர்.

    தெய்வமகள்

    தெய்வமகள்

    சன் டிவியின் தெய்வமகள் தொடரை தினசரி 3 லட்சம் பார்வையாளர்கள் யுடுயூப் மூலம் பார்த்து ரசிக்கின்றனர். அண்ணி, கொழுந்தனர் மோதல்தான் ஆனாலும் நாயகன் பிரகாஷ் நாயகி சத்யாவின் ரொமான்ஸ் அநேகம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

    வாணி ராணி

    வாணி ராணி

    ராதிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் வாணி ராணி தொடரை தினசரி 2,50000 பார்வையாளர்கள் யுடுயூப்பில் பார்த்து ரசிக்கின்றனர். அதுவும் வாணியை விட ராணிக்குத்தான் ரசிகர்கள் அதிகம். கௌதம் பூஜாவின் ரொமான்ஸ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதில் மாமியார் வாணியை எதிர்க்கும் மருமகள் டிம்பிள் டிராக்கிற்கு தனி வரவேற்பு உள்ளது.

    பிரியமானவள்

    பிரியமானவள்

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சூப்பர் மாமியார் என்று பெயரெடுத்த உமாவிற்கு இல்லத்தரசிகள் தனி ரசிகர் மன்றமே வைத்துள்ளனர் போல அந்த அளவிற்கு பிரியமானவளே தொடரை ரசித்து பார்க்கின்றனர். தொடர் ஆரம்பித்து சில மாதங்கள்தான் ஆகிறது. ஆனாலும் ஒரு லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

    வரவேற்பு இல்லாத வம்சம்

    வரவேற்பு இல்லாத வம்சம்

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியல்கள்தான் சூப்பர் என்றும் பல சீரியல்கள் மொக்கை என்றும் ஒரு பேச்சு உள்ளது. யுடுயூப்பில் அழகி, வள்ளி, வம்சம், என பல சீரியல்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. எல்லாமே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். இவற்றை 70000 பார்வையாளர்கள் வரை பார்த்து ரசிக்கின்றனர். இவற்றைப் பார்த்து விட்டு பார்வையாளர்கள் அடிக்கும் கமெண்ட்டுகள் படிக்க முடியாத ரகம்.

    வரவேற்பு எப்படி?

    வரவேற்பு எப்படி?

    கல்யாண பரிசு, தாமரை, சந்திரலேகா, தேவதை என சன் டிவியில் பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் அப்லோடு செய்யப்படுகிறது. இந்த சீரியல்களை சராசரியாக 50000 பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

    நாங்க ரொம்ப புதுசு…

    நாங்க ரொம்ப புதுசு…

    இதேபோல சன் டிவியில் குல தெய்வம், கேளடி கண்மணி என இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. ஆரம்பமே அமர்களம் என்று சொல்ல முடியாது. சராசரியாக 25ஆயிரம் பார்வையாளர்கள் முதல் 35 ஆயிரம் பார்வையாளர்கள் வரை பார்த்து வருகின்றனர். நாதஸ்வரம் தொடரில் இருந்த விறுவிறுப்பு குல தெய்வம் தொடரில் குறைவாகவே உள்ளது என்பது ரசிகர்களின் கருத்து.

    விஜய் டிவி ஹாட் ஸ்டார்

    விஜய் டிவி ஹாட் ஸ்டார்

    விஜய் டிவியின் தொடர்கள் நிகழ்ச்சிகள் எல்லாமே முதலில் யுடுயூப்பில் அப்லோட் செய்யப்பட்டது. இப்போது ‘ஹாட் ஸ்டாரில் அப்லோடு செய்யப்படுகின்றன. யுடுயூப் மூலம் பார்க்கும் ரசிகர்களை விட ஹாட் ஸ்டாரில் நிகழ்ச்சிகளை பார்க்கும் ரசிகர்கள் குறைவுதான்.

    ஆற அமர பார்க்கலாம்

    ஆற அமர பார்க்கலாம்

    டிவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியலை அரக்க பரக்க பார்க்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய வேலைகளை முடித்து விட்டு ரிலாக்ஸ் ஆக இணையத்தில் யு டுயூப் மூலம் பார்த்து ரசிக்கலாம். இடை இடையே விளம்பரங்களின் தொந்தரவும் இருக்காது என்பது முக்கியமான அம்சம்.

    ஆபிஸ் டிஸ்கசனே இதானாம்

    ஆபிஸ் டிஸ்கசனே இதானாம்

    நிறைய அலுவலகங்களில் மதிய நேரத்தில் சீரியல் பற்றிய டிஸ்கசன்தான் நடக்கிறதாம். காரணம் வீட்டில் மனைவிக்கு சாப்பிடும் போது கம்பெனி கொடுக்கும் கணவர்களும் டிவி சீரியல் பார்த்து பழகிவிட்டதால் விட்டுப்போன எபிசோடுகளை அலுவலகத்தில் யு டுயூப்பில் பார்த்து ரசிக்கின்றனராம். எப்படியோ சீரியலோட சீரியலா வேலையும் ஓடினா சரிதான்.

    English summary
    Most of the persons are seeing their favorite serials in You tube
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X