படிக்க போன இடத்தில் இப்படி பயப்படலாமா தமிழ்செல்வி?
சென்னை: சன் டிவியின் தமிழ் செல்வி சீரியலில் தமிழ்செல்வி வீட்டில் எல்லாரையும் சமாதானப் படுத்தி படிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை நிறைவேத்திக்கறா.
இருந்தும் என்ன பயன்... கிராமத்து பள்ளியில் படிச்ச தமிழ் செல்விக்கு பட்டணத்தில் படித்த பெண்கள் போல ஆங்கிலம் பேச வரலை.
இது ஒரு பெரிய அவமானமா ஆகிறது தமிழ் செல்விக்கு. இதனால் கல்லூரி பிடிக்கலை...தனியா கிளம்பி வீட்டுக்கு வந்துடறா

மாணவ மாணவிகள்
இப்படித்தான் படிக்க வெளியூர் போகும் இடங்களில் நம்மைப் போலதான் இவர்களும் என்று நினைக்க மறந்த மாணவ மாணவிகள் பயந்து பின்வாங்கி படிக்காம இருந்துடறாங்க. இல்லை விபரீத முடிவுக்கு வந்துடறாங்க.எந்த பிரச்சனை கை மீறி நடந்தாலும், தெரிவிக்க வேண்டியவர்களிடம் கண்டிப்பா ஆரம்பத்திலேயே தெரிவிச்சுடணும்.

தமிழ் செல்வி வீட்டில்
தமிழ் செல்வி ராத்திரியே கிளம்பி வீட்டுக்கு வந்துட்டா, ஹாஸ்டலில் இவளை காணலைன்னு கெட்ட வார்த்தையிலே திட்டறாங்க வார்டன். கடைசியில பார்த்தா தமிழ் செல்வி வீட்டுக்கு வந்து நிக்கறா.எனக்கு காலேஜ் பிடிக்கலை... யாரும் என் கூட சரியா பேச மாட்டேங்கறாங்கன்னு அழறா.

பெரியப்பா ஆறுதலா
தமிழ் செல்விக்கு பெரியப்பா ஆறுதலா பேசி... கொஞ்ச நேரம் படுத்து தூங்கி ரெஸ்ட் எடும்மா... பிறகு பேசிக்கலாம்னு சொல்லி, அவளை படுக்க போக சொல்றார். வீட்டில் எல்லாரும் இவதானே படிக்க போறேன்னு சொன்னா... இல்லேன்னா அப்பவே கல்யாணம் செய்து வச்சு இருக்கலாமேன்னு பேசிக்கறாங்க. மறுபடியும் கல்யாணம் ஏற்பாடுகள் செய்யணும்னா ரெட்டிப்பு செலவுதானேன்னு தமிழ்செல்வி அமமா சொல்றாங்க.

பொறுமையா கொஞ்சம்
கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லாரும்...அவ முதலில் தூங்கி எழுந்திருக்கட்டும் .பிறகு பேசிக்கலாம். அதுக்குள்ளே கல்யாணம் அது இதுன்னு பேசாதீங்கன்னு சொல்றார் பெரியப்பா. தமிழ்செல்வி பாட்டியும் தமிழுக்கு அறிவுரை சொல்றாங்க..
படிக்கணும்னா பெண்களுக்கு இந்த காலத்திலும் போராட்டம் இருக்கத்தான் செய்யுது...


Click it and Unblock the Notifications











