Tamil selvi serial: பாட்டி செய்தது ஓகே.. தமிழ்ச்செல்வி ஓவர்தான்!

சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் கொம்பன் ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டான்னு டாக்டர் வந்து சொல்றார்.

ஐயோ தமிழ்ச்செல்விக்கு ஒண்ணும் ஆகிடக் கூடாது... எங்க இருக்கான்னு யாரும் சொல்லாதீங்கன்னு பில்டப் குடுத்தாங்க.

பார்த்தால் தமிழ்ச்செல்வி பாட்டி அரிவாளை எடுத்துட்டு வந்ததுக்கே பயந்துகிட்டு விட்டுட்டான் ஜூட்.

இருந்தாலே தொல்லை

இருந்தாலே தொல்லை

பொண்ணுங்க சும்மா இருந்தாலே தொல்லை தேடித் தேடி வருது.இதுல வாத்தியாரை கொன்ன கொம்பனை கண்டபடி திட்டறா தமிழ்ச்செல்வி. இதைக் கூட தைரியம்னு பாராட்டலாம். ஆனால், ரவுடியோட முகத்தில் எச்சில் துப்பித் திட்டறது கொஞ்சம் ஓவர்தான். கொலைகாரன்னு பார்த்து பயந்து ஒடாம இருந்தாலே சாட்சின்னு கூப்பிட்டு சாகடிக்கறாங்க. எதுக்குடா வாத்தியாரை கொலை செய்தேன்னு டயலாக் பேசிட்டு துப்பறது கொஞ்சம் ஓவர்தான். பெரியப்பா போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்துட்டாருன்னு வேற சொல்றா...அதோட விட்டுட வேண்டியதுதானே.

எல்லாருக்கும் பயம்

எல்லாருக்கும் பயம்

கொம்பன் வந்துட்டான்னு எல்லா பொம்பளைங்களும் போட்டதை போட்டபடி வீட்டுக்கு ஓடிடறாங்க.தமிழ்ச்செல்வியைத்தான் கொம்பன் முதலில் தேடறான். அவளின் மாமன் தமிழ்ச்செல்வி ஐஏஎஸ் வருக வருகன்னு சுவற்றில் எழுதி இருந்ததைப் பார்த்து தமிழ்ச்செல்வி ஊரிலில் இல்லைன்னு தெரிஞ்சுக்கறானாம். அதனால, தமிழ்ச்செல்வியின் அத்தை அங்கு நடந்து போயிகிட்டு இருக்கையில், அவங்கப் பேரை சொல்லிக் கூப்பிடறான் கொம்பன்.

எங்கே தமிழ்ச்செல்வி

எங்கே தமிழ்ச்செல்வி

அவங்க திரும்பிப் பார்க்க, தமிழ்ச்செல்வி ஊரில் இல்லை படிக்க போயிருக்கன்னு தெரியும்.எந்த ஊருக்கு படிக்கப்போயிர்டுக்கான்னு கேட்கிறான் அவளிடம் கத்தியை காட்டி மிரட்டிகிட்டே. அவ காலேஜுக்கு போயிருக்கான்னு அத்தை சொல்ல, எந்த காலேஜுன்னு சொல்லுன்னு மிரட்டறான். அங்கிருந்து சரக்குன்னு ஒரு சத்தம் கையில் அரிவாளை வச்சுகிட்டு, கொம்பனின் கன்னத்தில் பொளேர்னு ஒரு அடி.

வெட்டுவேன்னு மிரட்டல்

வெட்டுவேன்னு மிரட்டல்

அரிவாளை காமிச்சு வெட்டிடுவேன்..எல்லாரும் ஒடி வாங்கடா.. இவனை புடிச்சு மரத்துல கட்டி வைங்க போலீஸுக்கு தகவல் சொல்லி, உடனே வர சொல்லலாம்னு பாட்டி மிரட்ட ,துண்டைக் காணோம், துணியை க்காணோம்ன்னு ஓடறான் கொம்பன். இவனுக்கு இவ்ளோ பில்டப்...

கொம்பன் கொம்பன்னு சொல்லிக்கிட்டு, தமிழ்ச்செல்விக்கு என்னாகுமோன்னு பயந்தது ப்பூ இதுக்குத்தானான்னு நினைக்க வேண்டி இருக்குங்க...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X