ஆஹா.. உறுதி மொழிக்காக தமிழ் செல்வி நடிச்சு இருக்கா...சூப்பர்!
சென்னை: சன் டிவியின் புத்தம் புது சீரியல் தமிழ்செல்வி. இந்த சீரியலின் ஆரம்பமே பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை எழுதி இருக்கும் தமிழ்செல்விக்கு கல்யாணம்.
கல்யாணத்துக்கு தயாராகி மணப்பெண் அலங்காரமும் முடிஞ்சாச்சு... பொண்ணை அழைச்சுட்டு வாங்கன்னு ஐயர் சொல்றார்.
தமிழ்செல்வி வர்றா...வரும்போதே கை கால் இழுத்து வாய் கோணி ஃபிட்ஸ் வந்துருது.உடனே எல்லாரும் டாக்டர் வீட்டுக்கு தமிழ்செல்வியை தூக்கிகிட்டு ஓடறாங்க.

டாக்டராக கு.ஞானசம்பந்தம்
இந்த சீரியலில் டாக்டராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் நடிச்சு இருக்கார். இவர் இந்த சீரியலுக்கு ஒரு பிளாஸ்னு சொல்லலாம்.அனால் தொடர்ந்து நடிப்பாரா என்பதுதான் கேள்விக்குறி. அவர் எல்லாரையும் வெளியில போக சொல்லிட்டு, தமிழ்செல்வி நடிச்சது போதும் எழுந்திருன்னு சொல்றார்.

நீ நடிக்கறே தெரியும்
எனக்கு உன் நாடியை பிடிச்சு பார்த்த உடனே உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. எதுக்கு நடிக்கறே.. கல்யாணம் பிடிக்கலியான்னு கேட்கறார். இல்லை டாக்டர்.. என் குடும்பத்துல யாரும் படிக்கலை. அதுவும் நான் ஸ்கூலில் தமிழ்செல்வியாகிய நான் படிச்சு மாவட்ட ஆதிசியர் ஆவேன்னு உறுதி மொழி எடுத்தேன். ஆனா, வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்கன்னு சொல்றா.

இன்னிக்கு உனக்கு ரிசல்ட்
இன்னிக்கு உனக்கு ரிசல்ட் ஆச்சே...பார்க்கலாம்னு சொல்லிட்டு பார்த்தால் தமிழ்செல்வி நல்ல மார்க். மாவட்டத்தில் முதலிடம். சரி..நான் உங்க வீட்டுல இன்னும் அஞ்சு வருஷத்துக்கு உனக்கு கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொல்லிடறேன்னு சொல்லி அது போலவே சொல்றார்.

படிக்கட்டும் தமிழ்செல்வி
நீங்க கல்யாணம்பண்ணி வைக்கற வரைக்கும் தமிழ்செல்வி படிக்கட்டும்னு சொல்றார்.வீட்டில் எல்லாரும் சம்மதிக்க கல்யாணம் நின்னு போயிருது.இனி தமிழ்செல்வியை மாவட்ட ஆட்சியரா பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











