Tamilselvi serial: இந்த பாட்டி இப்படி...அந்த பாட்டி அப்படி! நல்ல பார்ட்டிங்கப்பா!

சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் இரண்டு பாட்டிகள், தங்களது பேர பிள்ளைகளுக்கு இரண்டு வித ஆலோசனைகள் தர்றாங்க. தமிழ்ச்செல்வின்னு ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள.

தமிழ்ச்செல்வி மாமன் சரவணனுக்குதான் என்று பிறந்த போது இரு வீட்டாரும் செய்த முடிவு. பிளஸ் 2 முடித்தவுடன் கல்யாணம் செய்து விடலாம் என்கிற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் படிச்சு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படும் தமிழ் செல்வியின் ஆசையை நிறைவேத்த அவளுக்கு மயக்கம் வந்த மாதிரி நடிக்க வச்சு, கல்யாணத்தை நடக்க விடாம செய்துடறாங்க

இப்போது தமிழ்ச்செல்வி படிச்சு முடிச்சுட்டு வந்தாலும், கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறாள். அதற்குள் பாட்டி தனக்கு உடம்பு சரியில்லாதது போல நடிச்சு, தமிழ்ச்செல்வி, சரவணன் கல்யாணத்தை நடத்திடுங்கன்னு சொல்றாங்க.

பாட்டி சரவணன்

பாட்டி சரவணன்

தமிழ்ச்செல்வி படிச்சு முடிச்சுட்டு வருகையில், சரவணன் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறான்.அப்போது அங்கே வந்த பாட்டியிடம் அப்போது கல்யாணம் நடக்க கூடாதுன்னு தமிழ்ச்செல்விக்கு ஆதரவா பேசினே பாட்டி.. இப்போதுதான் தமிழ்ச்செல்வி படிச்சு முடிச்சுட்டு வந்துட்டாளே..எனக்கு உடனே எனக்கு கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடு பண்ணுவியா பாட்டின்னு கேட்கறான் சரவணன். தமிழ்ச்செல்விக்காக அன்னிக்கு நடிச்சேன், இன்னிக்கு உனக்காக நடிக்கிறேண்டா சரவனான்னு மயக்கம் வந்த மாதிரி நடிச்சு, குடும்ப டாக்டரிடம், தனக்கு இதயத்தில் கோளாறு இருக்குதுன்னு பொய் சொல்லி, அவங்க ஆசைப்படற மாதிரி கல்யாணத்தை நடத்தி முடிச்சுருங்கன்னு சொல்ல வைக்கறாங்க.

கலக்கத்தில் தமிழ்ச்செல்வி

கலக்கத்தில் தமிழ்ச்செல்வி

கலெக்டருக்கு படிக்கணும்.. பாட்டி என்னடான்னா கல்யாணம் செய்துக்க சொல்றாங்கன்னு கலக்கத்தில் இருக்கும் தமிழ்ச்செல்வி, அந்த ஊரில் இருக்கும் முருகன் கோயிலுக்கு போறா. வீட்டில் முகூர்த்தத்துக்கு நாள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. கூடிய சீக்கிரத்தில் எந்த முகூர்த்த தேதி இருக்கோ, அதை சொல்லுங்கன்னு பாட்டி கேட்கறாங்க .நிஜமாவே வயசான எனக்கு என்னிக்கு எது நடக்குதுன்னு சொல்ல முடியாது. அதனால் சீக்கிரம் கல்யாண தேதி குறிச்சுடுங்கன்னு சொல்றாங்க.

பாட்டி அமுதன்

பாட்டி அமுதன்

தமிழ்ச்செல்வி கல்லூரியில் படிக்கும் போது, ரவுடிகளிடம் இருந்து அவளை காப்பாத்தியவன் அமுதன்.அவனுக்கு சட்டுன்னு தமிழ்ச்செல்வி மேல காதல் வந்துருது. ஆனால், தமிழ்ச்செல்வி தனது தங்கையின் கிளாஸ்மேட்தான் என்று லேட்டா தெரியுது. தமிழ்ச்செல்வி கோல்ட் மெடலிஸ்ட், அதை வாங்க ஆசைப்பட்ட அமுதனின் தங்கை இலக்கியாவுக்கு தமிழ்ச்செல்வி மேல் கோவம்.. அமுதனின் பாட்டிக்கு தமிழ்ச்செல்வியை பிடிச்சு போகுது. அதனால், தமிழ்ச்செல்வியைத் தேடி அவளது கிராமத்துக்கு வந்திருக்கும் அமுதன் கோயிலில் தமிழ்ச்செல்வியை பார்க்கிறான்.

பேரனுக்கு பாட்டி

பேரனுக்கு பாட்டி

இந்த பாட்டி பேரனுக்கு என்ன அட்வைஸ் சொல்றாங்க தெரியுமா, அமுதா நீங்க தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்துக்கறேன்னு கேட்டால், இங்க இலக்கிய முதலில் சம்மதிக்க மாட்டா. அதனால், அவள் கோயிலில்தானே இருக்கா. அங்கே அம்மன் கழுத்தில் தாலி இருக்கும். அதை எடுத்து தமிழ்ச்செல்வி கழுத்துல உடனே கட்டிடுங்க.புருஷன், பொண்டாட்டியா வீட்டுக்கு வந்தால் ஏத்துப்பாங்கன்னு சொல்றாங்க.

இப்படிப்பட்ட அட்வைஸ் எல்லாம் இளம் தலைமுறையினருக்கு பாட்டிங்க தரலாமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X