Tamil selvi serial: பள்ளிப் போகும் பெண் பிள்ளைகளை பயமுறுத்தற மாதிரி இருக்கே!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் தமிழ்ச்செல்வி தங்கச்சி மல்லிகா பள்ளியில் இருந்து வரும்போது காணாமல் போயிருது. முகம் தெரியாத ஒருத்தன், மல்லிகாவை துரத்த, பொண்ணு கிணத்துக்குள் விழுந்துருது.
வீட்டில் அம்மா மல்லிகா இன்னும் பள்ளிக்கூடத்தில் இருந்து வரலைன்னு கவலையில்லை இருக்காங்க. கொஞ்ச நேரம் ஆனதும் எல்லாரிடமும் சொல்லி அழ ஆரம்பிக்க, ஆண்கள் எல்லாரும் மல்லிகாவைத் தேடித் போறாங்க.
மல்லிகா தலையில் வைச்சிருந்த மல்லிகைப் பூ கிணற்றில் மிதக்கிறது. சைக்கிள் பக்கத்தில் கவிழ்ந்து கிடக்கிறது. செருப்பு இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது. எப்படி பதைபதைக்கும் மனசு.

பெண் பிள்ளைகளை
ஏற்கனவே பெண் பிள்ளைகளை கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் நகரத்து பள்ளிக்கு அனுப்பிட்டு பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்காங்க. இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அவலமான காட்சிகளை காண்பித்தால் வயிறு பகீர்னு ஆகாதா? இன்னும் முழுவதுமாக பள்ளி செல்லும் பெண் பிள்ளைகளுக்கான முழுப் பாதுகாப்பு கிடைக்கலைன்னு வருத்தப்பட்டு கொண்டு இஇருக்கும் போது இப்படி காட்சிகளை காண்பித்து மெய்யாக்கினால் எப்படி?

பிள்ளைகள் வெகுதூரம்
எத்தனையோ கிராமங்களில் இன்னும் போக்கு வரத்து வசதிகள் இல்லாமல் சைக்கிளில்தான் பிள்ளைகள் பள்ளி சென்று வருகிறார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளை சியர் - அப் பண்ற மாதிரி காட்சிகள் அமைத்தால் பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கும் .மல்லிகாவைக் காணோம் பதறிக்கிட்டு தேடறாங்க. ஒரு இடத்தில் வாட்ச் கிடக்குது. அதை எடுத்துக்கிட்டு, தேடிப் போகறாங்க.

ஆளை புதைத்தது
ஆளை புதைத்தது போன்ற மண் குவியலில் மல்லிகாவின் கொலுசு கிடைக்குது. சரி என்று அழுதுகொண்டே தோண்ட டிபன் பாக்ஸ், ஸ்கூல் பேக் மட்டும் புதைச்சு வச்சு இருக்காங்க. அப்போ மல்லிகா எங்கேன்னு பதறிப் போய் போலீசில் கம்பளைண்ட் கொடுக்கறாங்க.ஏற்கனவே கொம்பன் கொம்பன்னு சொன்னாங்களே அவன் வேலையாக இருக்குமான்னு நினைச்சால், அவனும் இருக்காது.இப்போதுதான் போலீசில மாட்டினான்.. அவனுக்கு பயம் இருக்கும்னு பேசிக்கறாங்க.

குடுகுடுப்பை காரன்
அப்போ அந்த குடுகுடுப்பைக் காரன் மாதிரி ஒருத்தன் வந்து சின்ன பெண்ணை எதுக்கு கிணற்றில் விழ வைத்தான்.கிணற்றில் விழுந்த மல்லிகாவை காப்பாற்றினார்களா இல்லை தூக்கிச் சென்றார்களா? எல்லாப் பிள்ளைகளையும் போகவிட்டு, மல்லிகாவை குறி வைத்தது ஏன்?

பெண் பிள்ளைகளை
வெகு தூரத்தில் சென்று பள்ளியில் படித்து வரும் பெண் பிள்ளைகளை கூட்டமாக வரும்படி பெற்றோர் அறிவுறுத்த வேண்டாமா? கையில் போன் இருந்தால் வீட்டில் போயி பேசறேன்னு சொல்லிட்டு, அக்கா தமிழ்ச்செல்விகிட்ட வீட்டில் போய் போன் பேசக் கூடாதா?
இப்படி எல்லாம் சீரியஸாக சொல்கிறோம், தீர்வு சொல்ல முடிந்தாள் இது போன்ற காட்சிகள் வைத்து சீரியல் எடுங்கள். அப்படி இல்லாமல் வெறுமனே பெற்றவர்களை தவிக்க விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications











