Tamizha Tamizha: கணவர் கொடுமையால் முகத்தில் தழும்புடன் மாமியார்.. மருமகளுக்கு செய்ததுதான் வேற லெவல்

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வார எபிசோட்டில் Friendly மாமியார்கள் VS Lovely மருமகள்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Tamizha Tamizha Show August 27th promo discussion on Friendly Mother-in-laws VS Lovely Daughter-in-laws

அதில் ஒரு மாமியார் தான் பெற்ற கஷ்டம் தன்னுடைய மருமகள் படக்கூடாது என்பதற்காக தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் அவரிடம் சொல்லவில்லை என்று சொல்ல அதற்கு மருமகள் செய்த செயல் நெருட வைத்திருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவது வழக்கம்தான். அந்த மாதிரி தான் தற்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி போலவே ஜீ தமிழிலும் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல் பாகத்தை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார். அதற்கு பிறகு தற்போது பத்திரிகையாளர் ஆவுடையப்பன் தொகுப்பாளராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய நிகழ்ச்சிகள் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த வாரம் பிரன்ட்லி மாமியார்கள் VS லவ்லி மருமகள்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருக்கிறது.

கடந்த வாரம் வித விதமாக சாப்பாடு செய்யும் பிரபலங்கள் அதை ரசித்து உண்ணும் பிரபலங்கள் என்ற தலைப்பில் சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியும் கலகலப்பாக இருந்த நிலையில் அதைத்தொடர்ந்து இந்த வாரம் மாமியார்கள் மற்றும் மருமகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பிரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் அது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

அந்தப் பிரமோவில் மாமியார்களில் ஒருவரிடம் தொகுப்பாளர் ஆவுடையப்பன் உங்களுக்கும் ஒரு மாமியார் இருந்திருப்பாங்க இல்ல, அவங்க உங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டாங்க? என்று கேட்க, அதற்கு அங்கிருந்த ஒரு மாமியார் தான் பட்ட கஷ்டங்களை கதையாக சொல்கிறார். அதாவது தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கொண்டேன். வெறும் பாவாடை தாவணியோடு தான் அவங்க வீட்டுக்கு போனேன். அந்த நேரத்துல வீடு கட்டுனாங்க.

கல்லெடுக்கிறது, மண்ணு சுமக்கிறது என எல்லா வேலையும் செஞ்சு நான் தினமும் தூங்குறதுக்கு 10 மணி 11 மணி ஆகும். டெய்லி என் வீட்டுகாரர் குடிச்சிட்டு வருவார். டெய்லி எனக்கு அடிதான். அப்படி அடிக்கும்போது இந்த கண்ணு உள்ளே போயிரும். அந்த அளவுக்கு அடிப்பாரு. என் மூஞ்சி, கண்ணு, வாய் எல்லா இடமும் அவர் அடிச்சு போட்ட தழும்பு தான் அடையாளம். நான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன் நான் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு போறேன்னு கூட என் மருமகள் கிட்ட சொன்னது கிடையாது.

ஆனா என் மருமகளை இன்னைக்கு ராணி மாதிரி வச்சிருக்கேன் என்று சொல்ல, அதற்கு அவருடைய மருமகள் கண்கலங்கி அழுதபடி புரிஞ்சுக்காம நிறைய பண்ணிட்டேன். உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டே சாரி அத்தை என்று கேட்க, அதற்கு அந்த மாமியார் நீ இந்த மாதிரி அழுதுருவியோனு தான் நான் உன்கிட்ட சொல்லல என்று சொல்லி இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்கின்றனர். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X