தமிழும் சரஸ்வதியும் – பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம்... தயாராகும் ரசிகர்கள்
சென்னை : விஜய் டிவி.,யில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் தமிழும் சரஸ்வதி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழும் சரஸ்வதி சீரியல் இரவு 7.30 மணிக்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகின்றன.
Recommended Video

சிறிய அளவில் இருந்து படிப்படியாக தொழிலில் வளர்ந்த ஹீரோ குடும்பம், அவர்களை போட்டியாக நினைத்து தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள துடிக்கும் வில்லி குடும்பம், படித்த வாத்தியார் குடும்பத்தில் படிக்காமல் இருக்கும் ஹீரோயின் இவர்களுக்கு இடையேயான காதல், அன்பு, உறவுகளை சொல்லும் கதை தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதை.
கூட்டுக் குடும்பம், அண்ணன் - தம்பி பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை. யதார்த்தமான கதை, கதாபாத்திரங்களின் யதார்த்தமாக நடிப்பு இந்த சீரியலின் மிகப் பெரிய பிளசாக பார்க்கப்படுகிறது.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது தான் தமிழின் தம்பி கார்த்திக்கும், வசுந்தராவிற்கும் திருமணம் முடிந்துள்ளது. ஃபிரண்ட் திருமணத்திற்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு சரஸ்வதி, தமிழ் வீட்டு திருமணத்திற்கு சென்ற விபரம் சொக்கலிங்கத்திற்கு தெரிய வர, அவர் செம கோபத்தில் வீட்டில் காத்திருக்கிறார். இது தெரியாமல் சரஸ்வதியை வீட்டில் விடுவதற்காக காரில் கூட்டி வருகிறார் தமிழ்.
இந்த பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸில் கயல் பாப்பாவின் பிறந்தநாளன்று ஜீவாவுடன் தனியாக கோயிலுக்கும் சென்னைக்கும் செல்லும் ஆசையில் கிளம்புகிறார் மீனா. ஆனால் எதிர்பாராமல் குடும்பத்துடன் அனைவருமே கோயிலுக்கு கிளம்புகிறார்கள். இதனால் கடுப்பாகிறார் மீனா. ஆனால் அவர்களை தனியாக எங்காவது அனுப்பி வைக்கலாம் என முல்லையிடம் சொல்கிறார் கதிர்.
இப்படி இரு சீரியல்களும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த இரு சீரியல்களையும் ஒன்றாக இணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தினமும் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த மகா சங்கமம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.
இதற்கு முன் பாக்யலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களை இணைத்தும், பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களை இணைத்தும் மகா சங்கமமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் சீரியல்களின் சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











