அர்ணவ் இல்லாமல் நடந்த வளைகாப்பு.. கவலையை மறந்து சிரித்த திவ்யா.. வாழ்த்தும் ரசிகர்கள்!

சென்னை : நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு சக சீரியல் நடிகர்கள் பூ முடித்து வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை திவ்யா.

அர்ணவை திருமணம் செய்து கொண்ட போட்டோவை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால்,பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

நடிகை திவ்யா

நடிகை திவ்யா

நடிகை திவ்யா ஸ்ரீ தனது கணவர் அர்ணவ், திருமணமான போட்டோவை, நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதில் இருந்தே என்னை டார்ச்சர் செய்து வருகிறார். செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையுடன் தொடர்பு வைத்துள்ளார். இதை கேள்வி கேட்டதால், கர்ப்பிணி என்றும் பார்க்காமல் தன்னை அடித்துவிட்டதாக நடிகை திவ்யா கதறி அழுதபடி புகார் கூறியிருந்தார்.

3 பிரிவுகளில் வழக்கு

3 பிரிவுகளில் வழக்கு

நடிகை திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ணவ் மீது கொலை மிரட்டல் வன்புணர்வு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அர்ணவை விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை அழைக்கப்பட்டார். ஆனால், அவர் ஆஜராகததால், போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஜாமினில் விடுதலை

ஜாமினில் விடுதலை

இதையடுத்து, படப்பிடிப்பில் இருந்த அர்ணவை போலீசார் கைது செய்து, சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்திய பின் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 15நாள் நீதிமன்ற காவலில் இருந்த அர்ணவ், ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து அர்ணவ் விடுதலையானார்.

மகிழ்ச்சியான வளைகாப்பு

மகிழ்ச்சியான வளைகாப்பு

இந்நிலையில், அர்ணவின் மனைவி திவ்யா ஸ்ரீதருக்கு தற்போது 5 மாதம் தொடங்கி இருப்பதால், சக நடிகர்கள் அவருக்கு வளைகாப்பு நடத்தி உள்ளனர். அர்ணவ் இல்லாமல் இந்த பூ முடிப்பு நடந்திருந்தாலும், அதில் திவ்யா தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியாகவே இருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X