அஞ்சலி மாடல் அழகியாக த்ரிஷாவை பேட்டி எடுத்தார்.. ஆனால் இப்போ.. பிரபலம் பகிர்ந்த சுவாரஷ்ய பதிவு!

சென்னை : நடிகை அஞ்சலி இப்பொழுது இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நிவின் பாலியுடன் நடித்து வருகிறார்

துறுதுறுப்பான நடிப்புடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக வலம் வந்து கொண்டுள்ளார்

இந்த நிலையில் அஞ்சலி மாடல் அழகியாக இருந்து போது த்ரிஷாவை பேட்டி எடுத்த அரிய வீடியோ பிரபல விஜய் பகிர்ந்துள்ளது வைரலாகிறது.

சிறந்த நடிகைக்கான விருது

சிறந்த நடிகைக்கான விருது

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்ற நடிகை அஞ்சலி அதன்பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த அங்காடி தெரு இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுத் தந்தது. ஆரம்பத்திலேயே அதிரடியாக அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்த அஞ்சலி இப்பொழுதும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்

நிவின் பாலி ஹீரோவாக

நிவின் பாலி ஹீரோவாக

இயக்குனர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இப்போது மீண்டும் இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல பல கதைகளை இயக்கி மிகச் சிறந்த இயக்குனர் என பெயர் பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வருகிறார். இலங்கை தமிழர்களை பற்றி எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நீங்கள் கேட்ட பாடல்

நீங்கள் கேட்ட பாடல்

இவ்வாறு தென்னிந்திய திரைத் துறையில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி ஆரம்ப கட்டத்தில் மாடல் அழகியாக மீடியா வாழ்க்கையை தொடங்கி உள்ளார். பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியை யாராலும் மறக்க முடியாது. இன்றுவரை 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜயசாரதி தொகுத்து வழங்கினார்.

வித்தியாசமான மனிதர்களை

வித்தியாசமான மனிதர்களை

வணக்கம் சென்னை, வணக்கம் கோயம்புத்தூர், வணக்கம் திருச்சி என விஜயசாரதி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புகழ்பெற்ற இடத்தில் மனிதர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் பாடல்களை பேட்டி எடுத்து வந்தது அந்த நிகழ்ச்சியின் தனித்துவமாக இருந்து வந்தது

அஞ்சலி மாடல் அழகியாக

அஞ்சலி மாடல் அழகியாக

இந்த நிலையில் நடிகை த்ரிஷா நடிக்க வந்த ஆரம்பத்தில் சென்னையில் உள்ள மாயாஜால் மாலில் விஜயசாரதியுடன் இணைந்து சில மாடல்களும் ரசிகைகளாக பேட்டி எடுத்துள்ளனர். அந்தப் பேட்டியில் நடிகை அஞ்சலி மாடல் அழகியாக கலந்து கொண்டு த்ரிஷாவை பேட்டி எடுத்துள்ளார்.

நினைத்துக் கூட பார்க்கவில்லை

நினைத்துக் கூட பார்க்கவில்லை

அந்த வீடியோவை இப்பொழுது தொகுப்பாளர் விஜயசாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அப்போது மாடல் அழகியாக எனது நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண் இப்பொழுது முன்னனி நடிகையாக வரும் வருவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. என அப்போது மாடல் அழகியாக அஞ்சலியுடன் த்ரிஷாவை பேட்டி எடுத்த அரிய வீடியோ மற்றும் புகைப்படங்களை இப்பொழுது விஜயசாரதி பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. த்ரிஷாவுடன் அஞ்சலி ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் என்ற படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X