நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

By Mayura Akilan

Raasi Palan
காலை நேரத்தில் பெரும்பாலான தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ராசி பலன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இது எந்த அளவிற்கு மக்களுக்கு பயன் தருகின்றன என்பதைப் பற்றி ஒரு ரவுண்ட் அப்.

சன் டிவியில் தொடங்கி விஜய் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் டிவி உள்ளிட்ட பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காலை நேரத்தில் ராசிபலன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. சன் டிவியில் மட்டும் ஜோசியர் எழுதிக்கொடுத்த ராசி பலனை தொகுப்பாளினி படிப்பார். மற்ற தொலைக்காட்சிகளில் டைரக்டாக சம்பந்தபப்ட்ட ஜோசியர்கலே ஸ்டூடியோவுக்கு வந்து உட்கார்ந்து உங்களது ராசிபலனைக் கூறுவார்கள்.

எண்கணித ஜோதிட நிகழ்ச்சியில் நேரலை வேறு உண்டு. நேயர்களின் கேள்விகளுக்கு எண்கணித பண்டிதர்!!!! விளக்கம் அளிப்பார். இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மக்கள் அதை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் ஏதாவது ஒரு நல்ல விசயத்திற்கு கிளம்பும் நேரத்தில் இதுபோன்ற ராசிபலனை பார்க்க நேரிட்டால் அதில் கூறப்படும் பலன் நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அதேசமயம் கெடுதல் பலன்களை ஜோசியர் கூறிவிட்டால் போதும் அன்றைக்கு முழுவதும் மனம் அந்த ராசிபலனை சுற்றிக்கொண்டே இருக்கும். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தால் கூட பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் தினசரி காலையில் ராசிபலனை பார்த்து விட்டுத்தான் மறுவேளை பார்ப்பார்கள்.

தொலைக்காட்சிகளில் ராசிபலன் நிகழ்ச்சியை பார்த்தாலே திருமலை படத்தில் விவேக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வரும்.

அந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் இன்டர்வியூவிற்கு கிளம்பிக் கொண்டிருப்பார். அப்பொழுது தொலைக்காட்சியில் ராசி பலன் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். அதில் பலன் கூறும் ஜோசியர் குறிப்பிட்ட ராசியைக் கூறி இந்த ராசிக்குரிய அன்பர்கள் சிவப்பு, வெள்ளை நிறத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார். உடனே விவேக் தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி விடுவார்.

நீங்கள் தவிர்க்க வேண்டிய திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என்று ஜோசியர் கூறுவார்.

உடனே விவேக், அடப்பாவிகளா இருக்கிறதே நாலு திசைதானே. நாலு திசையிலும் போகக் கூடாதுன்னு சொன்னா எந்த திசையில நான் இன்டர்வியூ போறது என்று கேட்பார்.அந்த நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். அப்பொழுது விவேக், மற்றவங்களுக்கு ராசிபலன் சொல்றதுக்கு முன்னாடி உங்க ராசிபலன் எப்படியிருக்கு கொஞ்சம் பார்த்துக்கொள்ளக்கூடாதாடா என்று பஞ்ச் அடிப்பார்.

அதற்காக ராசிபலனை ஒளிபரப்பும் எல்லா தொலைக்காட்சிகளும் பொய்யான ஒன்றை ஒளிபரப்புகின்றன என்று கூறவில்லை. ஜோசியமும், ஜாதகமும் மனிதர்களின் வசதிக்காகத்தானே தவிர அவைகளுக்காக நம்மை மாற்றிக்கொள்ளக்கூடாது. குருபெயர்ச்சி சரியில்லை, சனிப்பெயர்ச்சி சாதகமில்லை. ராகு, கேது சுற்றிக்கொண்டிருக்கிறான் என்று ஜோசியர்கள் கூறுவதை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விடுவதே நமக்கு நன்மை.

அது சரி நீங்க எத்தனை பேர் காலையில ராசிபலன் பார்த்துட்டு வேலையை ஆரம்பிக்கிறீங்க?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X