Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சந்தேகம் தான் பிரச்சனைக்கு காரணம்..சேர்ந்து வாழ ஆசைபடுகிறேன்.. அர்னவ் பேட்டி!
சென்னை : சந்தேகம் தான் பிரச்சனைக்கு முழுக்காரணம் என்று சீரியல் நடிகர் அர்னவ் பேட்டியில் கூறியுள்ளார்.
சின்னத்திரை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர், கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் அர்னவை காதலித்து வந்தார்.
கிட்டத்தட்ட 5 வருடங்களாக ஒன்றாகவே ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
பிக்
பாஸ்
வீட்டுக்குள்
நுழைந்த
ஆர்யன்
தினேஷ்…
யார்
இந்த
இலங்கை
தமிழ்
ராப்
சிங்கர்?

நடிகை திவ்யா
நடிகை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் செய்து கொண்ட போட்டோவை பகிர்ந்து திருமணமானதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து, சில நாட்கள் கழித்து கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

மதம் மாறி திருமணம்
மேலும், அர்னவ் செல்லம்மா சீரியல் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருவதாகவும், அந்த நடிகையின் பேச்சை கேட்டுக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், திருமணமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் எப்போது பகிர்ந்தேனோ அப்போது முதல், அவர் என்னை மிரட்டி வருகிறார். நான் அவருக்காக இஸ்லாமிய மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டேன் ஆனால், அவர் என்னை உதாசீனப்படுத்துகிறார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
அர்னவ் பேட்டி
நடிகை திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அர்னவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று, ஆதாரமாக தனது செல்போனில் போட்டோக்கள் உள்ளன. ஒரு முறை அல்ல பல முறை திவ்யா தற்கொலை செய்து கொள்வேன் என கைகளை கத்தியால் கிழித்துக் கொண்டு என்னை மிரட்டி உள்ளார்.

குழந்தை இருப்பது தெரியாது
நாங்கள் காதலித்தது சேர்ந்து இருந்தது எல்லாம் உண்மை தான். அவர் திருமணம் ஆனவர் என்பது தெரிந்து தான் அவரை காதலித்தேன். ஆனால், திவ்யா விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். திருமணத்திற்காக விவாகரத்து பேப்பரை கேட்டபோது தான் இந்த ஜனவரியில் தான் விவாகரத்தாகி உள்ளதே தெரிந்தது. மேலும், அவர் குழந்தை இருப்பதையும் எனக்கு சொல்லவே என்றார்.

வீண் சந்தேகம்
மேலும், செல்லம்மா சீரியல் நடிகையுடன் என்னை சேர்த்து வைத்து பேசுகிறார், சந்தேகப்படுகிறார், அவரும் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடன் நான் பேசி, பழகுவதை திவ்யா தவறாக புரிந்து கொண்டு தினமும், அந்த நடிகையையும் என்னையும் சேர்த்து வைத்து அசிங்கமாக பேசி மனரீதியாக துன்புறுத்துகிறார். திவ்யாவின் தேவையில்லாத சந்தேகமே இந்த பிரச்சனைக்கு முழுக்காரணம். எல்லா பிரச்சனையை தாண்டியும் எனக்கு அவருடன் சேர்ந்து வாழவே ஆசை என அர்னவ் கூறியுள்ளார்.