பிரபல சீரியல் நடிகர் தற்கொலை… காரணம் என்ன தெரியுமா?
சென்னை: கடந்த வாரம் சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பவித்ரா ஜெயராமுடன் அந்த சீரியலில் இணைந்து நடித்த மற்றொரு நடிகரும் அவரது கணவருமான சந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பவித்ரா ஜெயராம் Trinayani எனும் தெலுங்கு சீரியலில் திலோத்தமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் கன்னட சீரியல்களிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹனகெரேவுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷெரிப்பள்ளி கிராம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரில் மோதியது. அப்போது,ஹைதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்த பேருந்து, காரின் வலது பக்கம் மோதியதில் கார் நொறுங்கியது. இதில், பாவித்ரா சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். பவித்ராவின் சகோதரி அபெக்ஷா, கணவர் சந்திரகாந்த், கார் டிரைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர்.

நடிகர் மரணம்: இந்நிலையில்,பவித்ரா ஜெயராம் மரணத்தால் மனஉளைச்சலில் இருந்த சந்து மணிகொண்டாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சந்திரகாந்தும், பவித்ரா ஜெயராமும் சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சந்துவும் பவித்ரா ஜெயராமும் ஒன்றாக வாழ்ந்த அதே வீட்டிலேய தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் இறந்தபோது, சந்திரகாந்த் காரில் இருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், சந்திரகாந்த், பெங்களூரு பயணத்திற்குப் பிறகு தானும் பவித்ராவும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக்க விரும்பியதாக கூறியிருந்தார். நடிகர் சந்துவின் இந்த விபரீத முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

காதல் மலர்ந்துள்ளது: நடிகர் சந்து, பவித்ரா ஜெயராமின் கணவராக திரிநயனி என்ற தொலைக்காட்சி தொடரி நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் லிவ்விங் டூ ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். நடிகை பவித்ரா ஜெயராம் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அதே போல நடிகர் சந்திரகாந்த் என்ற சந்துவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











