என்னங்கடா நடக்குது இங்க.. டிவி சீரியல் நடிகைகள் இருவரும் மாத்தி மாத்தி தாலி கட்டிக்கிறாங்க.. வீடியோ!
கொச்சி: கடந்த சில மாதங்களாகவே சின்னத்திரை பிரபலங்களுக்கு அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணம் ஆனது. அதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்தில் பிக் பாஸ் பிரபலங்கள் அமீர் - பாவனிக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிக் கொண்டு, மாலையும் கழுத்துமாக நிற்கும் வீடியோவை அவர்களே பகிர்ந்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
மலையாளத்தில் உள்ள சேனலான ஜீ கேரளம் மற்றும் அஜந்தா சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல், அபூர்வ ராகம். இந்த சீரியலில் நடிக்கும் நடிகை, ஷெஹனாஸ் ஹுசைன். இவர் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடிக்கும் சீரியல் ஜீ கேரளம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் இது மட்டும் இல்லாமல் இதற்கு முன்னர் சூர்யா சேனலில் ஒளிபரப்பான சீரியல்களான ஆதிரா மற்றும் சுந்தரி ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றார்.
இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், "அவரும், மற்றொரு சீரியல் நடிகையான அஸ்வதி அக்னிஹோத்ரியும் மாறி மாறி தாலி கட்டிக் கொள்கிறார்கள். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே ஏதோ பேசிக் கொண்டு தாலி கட்டிக் கொள்கிறார்கள்.

ரொமான்ஸ்: தாலி கட்டி முடித்த பின்னர் இருவரும் ஒருவர் காலில் மற்றொருவர் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள். அதன் பின்னர், இருவரும் ரிசப்ஷன் மேடையில் நிற்பது போல கழுத்தில் புதுத் தாலியும், மாலையுமாக நிற்கிறார்கள். மேலும் ஒருவருக்கு மற்றொருவர் மாலையை சரி செய்வது, ஆபரணங்களை சரி செய்வது" என அந்த வீடியோ முழுவதும் மங்களகரமாகவும் ரொமான்ட்டிக்காவும் உள்ளது. அந்த வீடியோவை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றாக வெளியிட்டுள்ளார்கள். சீரியல் நடிகை அஸ்வதி அக்னிஹோத்ரி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேதா சீரியலிலும், சன் டிவியில் மலர் சீரியலிலும் நடித்துள்ளார். அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவுக்கு, ஆங்கிலத்தில் ' கம் ஆன்' என கேப்ஷன் இட்டுள்ளார்கள்.

திருமணம்?: இவர்கள் இருவரும் தாலி கட்டிக் கொள்வதும், மாலையும் கழுத்துமாக இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர்களின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், இருவருக்கும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் என்னடா நடக்குது, பெண்ணும் பெண்ணும் தாலி கட்டிக்கறாங்க என திட்டி வருகிறார்கள். ஆனால் வீடியோவைப் பார்த்தால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது போல் தெரியவில்லை. மாறாக இது ஏதோ சீரியலுக்காக எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம், அல்லது விளம்பரத்திற்காகவோ, அல்லது ரீல்ஸ்க்காகவோ கூட எடுத்த வீடியோவாக இருக்கலாம் என சிலர் கூறுகிறார்கள். அதே நேரத்தில் ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் இணைந்து வாழ்வது என்பது, தவறு கிடையாது. இரு பெண்களோ, இரு ஆண்களோ சேர்ந்து வாழ்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











