தடுப்பு சுவரில் மோதிய கார்..சின்னத்திரை நடிகரின் மகன் சம்பவ இடத்திலேயே பலி..தீபாவளியில் நடந்த சோகம்!

சென்னை: அதிவேகமாக சென்ற கார் சாலை தடுப்பு சுவரில் மோதியதில் சின்னத்திரை நடிகரின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீபாவளி நாளில் நடந்த இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் நிதிஷ். தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தீபாவளியை வீட்டில் கொண்டாடி விட்டு, மாலை தனது நண்பர்களுடன் ஓஎம்ஆர் சாலையில் உள்ள விளையாட்டு திடலுக்கு சென்று விட்டு தனது நண்பர்களுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, கார் வேளச்சேரி அருகே வந்து கொண்டு இருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்கு உள்ளானது.

televison nithish death

சின்னத்திரை நடிகரின் மகன்: இந்த விபத்தில் காரின் முன் பகுதி குறிப்பாக ஓட்டுநர் இருக்கை மொத்தமா நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த நிதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் நிதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், நிதிஷின் நண்பர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இறுதிச்சடங்கு: விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று விடுமுறை தினம் என்பதால், சாலையில் பெரிய அளவில் வாகனம் இல்லாததால், நிதிஷ் காரை வேகமாக ஓட்டி உள்ளார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து நிதிஷின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்களை மருத்துவமனையில் உள்ளனர். தீபாவளி நாள் அதுவும் சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேதப்பரிசோதனைக்கு பின் உடல் ராஜா அண்ணாமலைபுரம் நடிகர் கார்த்திக்கின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு இன்று பிற்பகல் இறுதிசடங்கு நடைபெறும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X