மாமியாரை திருமணம் செய்த நடிகர்.. சீரியலில் நடித்த போது மலர்ந்த காதல்.. யார் அந்த ஜோடி தெரியுமா?
சென்னை: காதல் என்பது ஒருவர் மீது பல காரணங்களால் வருகிறது. சிலருக்கு ஒருவரை பார்த்ததும் பிடித்துவிடும்.சிலருக்கு பேசிப் பழகி அவர்களுக்குள் நிறைய விஷயங்கள் ஒத்துப்போனதும் பிடித்துவிடும். இன்னும் சிலருக்கு ஒருவகையான உணர்வு தொடர்பு இருப்பது போல் தோன்றுவதால் மனதிற்குள் காதல் ஏற்படும். அப்படி மனதிற்குள் ஒருவர் மீது காதல் வர பல காரணங்கள் இருக்கிறது. அப்படி ஒரு ஜோடி சீரியலில் சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இதில் என்ன ஆச்சரியம், சீரியலில் சேர்ந்து நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது இயல்பு தானே என்று சொல்லாம். ஆனால், சீரியலில் தனக்கு மாமியாராக நடித்த நடிகையைத் தான் அந்த நடிகர் விழுந்து விழுந்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் ஜோடி: சினிமாவைவிட இல்லத்தரசிகளுக்கு சீரியல் பிடித்தமான ஒன்றாக இருப்பதால்,பல தொலைக்காட்சிகள் காலையில் தொடங்கி இரவு வரை போட்டி போட்டுக்கொண்டு சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கிலும் பல தொலைக்காட்சிகளில் பல சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இருப்பது இந்திரனில் - மேக்னா ஜோடி தான். இவர்கள் இருவரும் "சக்ரவாகம்".என்ற சீரியலில் இணைந்து நடித்தனர். இந்த சீரியலில் தமிழில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, சித்தி, சீரியல் போல டிஆர்பி ரேட்டிங்கில் ஒரு கலக்கு கலக்கியது.
மாமியாரை திருமணம் செய்த நடிகர்: 1000 எபிசோடுகளை கடந்து வெற்றி கரமாக ஓடிய இந்த சீரியலில், இந்திரனிலுக்கு மாமியாராக நடித்தவர் தான் மேக்னா ராமி. இவர்கள் இருவரும் அந்த சீரியலில் நடித்துக்கொண்டு இருந்த போதே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். சீரியல் முடிவதற்காக காத்திருந்த இவர்கள், சீரியல் முடிந்த பின், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது, இவர்களின் திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னத்தான் சீரியலாக இருந்தாலும், மாமியாரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று விமர்சனம் வந்தது. ஆனால், அதுப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஜம்முனு வாழ்ந்து வருகின்றனர்.
அண்மையில் இவர்கள் இருவரும் 20வது திருமண நாளை கோலாகலமாக இந்த ஜோடி கொண்டாடி அந்த போட்டோக்களையும் இணையத்தில் ஷேர் செய்திருந்தனர். அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நேரத்தில், கமெண்ட் பாக்சில் குழந்தை பெற்றுக்கொள்ளாதது குறித்து பலரும் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த அந்த ஜோடி, நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை கடந்து விட்டோம். இப்போது குழந்தை பிறந்தாலும், அவர்களை வளர்க்கும்போது எங்களுக்கு 60 வயதாகும்.அந்த சமயத்தில் குழந்தைகளை பார்த்துகொள்ள யார் இருப்பார்கள். அதனால் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு தொலைக்காட்சியில் வரவேற்பை பெற்ற "சக்ரவாகம்".என்ற சீரியல் கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது. அப்போதும் இந்த சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











