தொலைகாட்சிகளுக்கும் சென்சார் வேண்டும்... குடும்பத்தோட இந்த ஷோவை எப்படி பார்க்கிறது?

சென்னை: இணையவாசிகள் அவ்வப்போது சின்னத்திரைக்கும் சென்சார் வேண்டும் என்று பேசுவார்கள். அதற்கு காரணம் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடைபெறும் சில அட்ராசிட்டிகள் அப்படி இருக்கும். ரியாலிட்டி ஷோக்களில் ஓவர் ரியாலிட்டியாகச் சென்று குடும்பத்துடன் வீட்டில் பார்க்க முடியாதபடி பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தொடர்பான ஒரு விடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக உலா வருகிறது. இது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், இணையவாசிகள் மத்தியில் எதிர்வினையையும் சம்பாதித்து வருகிறது.

அதாவது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் இது தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி என்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக பரவி வரும் வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகளுக்கு அந்த வீடியோவில் உள்ள மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஆனால் இந்த செயலுக்குத்தான் இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Telugu Television Reality Show Goes Very Vulgarity Fans Oppose In Front Of Actress Radha

சின்னத்திரை அட்டூழியம்: அதாவது, ஜெயம் படத்தில் கவிதையே தெரியுமா பாடல் வரும் இல்லையா, அதுபோல சின்னத்திரை நடிகை ஒருவர் மேடையில் கட்டிலைப் போட்டு படுக்க வைக்கப்பட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் அவர் தனது வாயில் திராட்சை ஒன்றையும் உதட்டில் மட்டும் கடித்தபடியும், திராட்சை வெளியே தெரியும் படியும் படுத்துள்ளார். அப்போது மேலே இருந்து கயிறுகளால் கட்டப்பட்ட சின்னத்திரை நடிகர் ஒருவர், ஜெயம் ரவியை போல காற்றில் மிதந்து வருகிறார்.

உதட்டு மேல திராட்சை: அப்படி கயிறால் கட்டப்பட்டு காற்றில் மிதந்து வரும் சின்னத்திரை நடிகர், கட்டிலில் படுத்துக் கொண்டு உதட்டில் திராட்சையை கவ்வியபடி படுத்துக் கொண்டு இருக்கும் சின்னத்திரை நடிகையிடம் இருந்து, தனது வாயினால் அந்த திராட்சையை கவ்வி எடுக்கிறார். அதுவும் அந்த சின்னத்திரை நடிகை மீது படுத்தும் படுக்காமலும் எடுக்கிறார். இது போல ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை செய்கிறார். அதன் பின்னர் படுத்திருக்கும் சின்னத்திரை நடிகையை கட்டிப்பிடித்தவாறே அந்த சின்னத்திரை நடிகர் தூக்குகிறார். இதனை ஒரு போட்டியாக நடித்தியிருப்பார்கள் போல, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் இவர்களின் இந்த அட்ராசிட்டி போட்டிக்கு கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டு இருந்தார்கள்.

Telugu Television Reality Show Goes Very Vulgarity Fans Oppose In Front Of Actress Radha

ராதா கண் முன்: அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராகவோ அல்லது சிறப்பு விருந்தினராகவோ நடிகை ராதா கலந்து கொண்டிருப்பார் போல. நடிகை ராதாவும் இந்த அட்ராசிட்டி போட்டியை பார்த்து கைதட்டி, சிரித்து ஆரவாரம் செய்து கொண்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், சின்னத்திரைக்கு சென்சார் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். மேலும் சிலரோ, அதைத் தடுக்க யாரும் இல்லையா எனவும், உங்களை எல்லாம் மாடு முட்டும் எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். நடிகை ராதா கண் முன் இப்படி அட்டூழியம் செய்யறீங்களே எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X