Naam iruvar namaku iruvar serial: ஐயோடா தேவி மாயன் கையில...கழுத்திலே கத்தியை வச்சுட்டாளே!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் திட்டமிட்டு தம்பி அரவிந்த் கல்யாணம் செய்துக்க இருந்த தேவியை கல்யாணம் செய்துக்கறான்.
அரவிந்த் டாக்டர், தேவி நல்ல படிப்பு படிச்சு இருக்கறவ. ஆனா,அரவிந்த் கூட ரெட்டை பிறவியா பிறந்த மாயன் படிக்காதவன்.எப்படி இவனுடன் தேவிக்கு வாழ்க்கை ஒத்து வரும்? டைவர்ஸுக்கு அப்ளை பண்ணிடறாங்க.
ஆனாலும், போகப்போக மாயன் செய்யும் குறும்புகள், அலப்பறைகள், அவனின் குழந்தை உள்ளம், ரவுடித் தனம் எல்லாம் தேவிக்கு பிடிச்சு போகுது.

உயிருக்கு உயிராய்
மாயன் தேவியை உயிருக்கு உயிராய் காதலிக்கறான். தேவிக்கும் காதல் வரும் சமயம் மாயனை தேவியின் குடும்பத்துக்கு பிடிக்கலை. எப்படியாவது வீண் பழிபோட்டு அவனை வீட்டை விட்டுத் துரத்த தேவியின் அம்மாவே மாயனை கொலைசெய்ய ஆள் அனுப்பறாங்க. இந்த விஷயம் தெரிந்து மாயன் தேவியிடம் உங்க அம்மாதான் என்னை கொல்ல ஆளனுப்பியதுன்னு சொன்னதும் அம்மா அழுது நடிக்கறாங்க. தேவியின் மனசும் அம்மாவின் பக்கம் சாய்ஞ்சுருது.

தாமரையை அரவிந்தும்
இப்படி மாயன் நடத்திய களேபரத்தில் டாக்டர் அரவிந்த்க்கு கத்தி முனையில் தாமரையை கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க. இப்போ என்னடான்னா இரு ஜோடிகளுக்கும் இன்னும் சாந்தி முகூர்த்தம் நடக்கலை. அரவிந்தும் தாமரையும் கூட டைவர்ஸுக்கு அப்ளை பண்ணி இருக்காங்க.

ரெண்டு அப்பாக்களும்
ரெண்டு அப்பாக்களுக்கும் அதாவது ரெட்டைப் பிள்ளை பெத்து மாயனை மட்டும் தான் வைத்துக்கொண்டு, அரவிந்தை நண்பனுக்கு பிள்ளையாகத் தத்து கொடுத்த அந்த வளர்த்த அப்பாவும், பெத்த அப்பாவும் சேர்ந்து இரு பிள்ளைகளும் தாம்பத்திய வாழ்க்கை நடத்தலைன்னு தெரிஞ்சுக்கறாங்க.

வந்துருங்க விசேஷத்துக்கு
தேவி வீட்டுக்கு மாயனின் அப்பாவும் ,அரவிந்த் அப்பாவும் போயி,வீட்டில் விசேஷம் வச்சு இருக்கேன். வந்துரும்மான்னு தேவிகிட்ட கேட்கறாங்க. தேவிக்கு எப்போதும் மாமானார் மேல தனி பாசம் உண்டு.மாயன் தேவி வீட்டோடத்தான் மாப்பிள்ளையா இருக்கான். சரி மாமா, நான் அவரை அழைச்சுக்கிட்டு வந்துடறேன்னு வாக்கு குடுக்கறா.

தேவி கத்தி
மாயன் எதுக்குன்னு தெரியாமலே வரலேன்னு சொல்றான்.தேவி எதுக்குன்னு தெரியாமலே அவனை வற்புறுத்தறா. அவன் வர மாட்டேங்கன்னு பிடிவாதம் பிடிக்க, ஆப்பிள் நறுக்கிக் கொண்டு இருந்த கத்தியை கையில, கழுத்துல வச்சுடறா.

எங்களை கூப்பிடுங்க
விசேஷம் வைங்க...எங்களை கூப்பிடுங்கன்னு அங்கே போய் கெஞ்சிட்டு வர்றது. இங்கே வந்து என்னை கெஞ்ச வச்சு வரமாட்டேன்னு அடம் பிடிக்கறது. இதே வேலையா போச்சு. இப்போ சொல்லிட்டு கத்தியை வைக்கறேன்...இனிமே அடம் பிடிச்சே சொல்லாமலே கத்தியை வச்சிருவேன்னு மிரட்டிட்டு போறா.
என்ன நடக்கப்போகுதோ... விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வர இன்னும் பத்து நாட்கள்தான் இருக்குதுன்னு வீட்டில் பேசிக்கறாங்க.


Click it and Unblock the Notifications











