BMW கார் வாங்கிய தாடி பாலாஜி; மனுஷன் முகத்துல சந்தோஷம் என்னம்மா பொங்குது பாருங்க!

சென்னை: நேத்து வந்த குக் வித் கோமாளி பிரபலங்கள் எல்லாம் புதுசு புதுசா கார் வாங்கும் போது, பல வருடங்களாக இருந்த நம்ம தாடி பாலாஜி கார் வாங்க கூடாதா?

BMW கார் ஒன்றையே மனுஷன் கலக்கலாக வாங்கி அதற்கு முன் நின்று கொடுத்துள்ள அட்டகாசமான போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏகப்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ள தாடி பாலாஜி விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வருகிறார்.

காமெடி நடிகர்

காமெடி நடிகர்

விவேக், வடிவேலு உள்ளிட்ட காமெடி லெஜண்டுகளுடன் ஏகப்பட்ட படங்களில் துணை காமெடியனாக நடித்து அசத்தியவர் தாடி பாலாஜி. தளபதி விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும், சச்சின் உள்ளிட்ட பல படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாடி பாலாஜி விஜய் டிவியின் மாயாவி மாரிச்சான் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். எப்போதுமே தாடி வைத்துக் கொண்டு படங்களில் நடித்து வந்த அவரை தாடி பாலாஜி என்றே அனைவரும் அழைக்க ஆரம்பிக்க அவரும் தாடியை தனது அடையாளமாகவே ஆக்கி விட்டார்.

காமெடி ஜட்ஜ்

காமெடி ஜட்ஜ்

விஜய் டிவியில் பல வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் தாடி பாலாஜி கலக்கப் போவது யாரு உள்ளிட்ட ஏகப்பட்ட காமெடி ஷோக்களுக்கு ஜட்ஜாக செயல்பட்டு வருகிறார். ஈரோடு மகேஷ் உடன் இணைந்து இவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் காமெடி சரவெடி கேரண்டி.

மனைவியுடன் பிரச்சனை

மனைவியுடன் பிரச்சனை

முதல் மனைவியை பிரிந்த தாடி பாலாஜி இரண்டாவதாக நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்து விவாகரத்தில் கொண்டு போய் முடிந்தது.

மனைவியுடன் பிக்பாஸில்

மனைவியுடன் பிக்பாஸில்

சர்ச்சையான பிரபலங்களை கொண்டு போய் மேலும், சர்ச்சைகளை கிளப்பி டி.ஆர்.பியை எகிற வைத்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா பாலாஜியை பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு போய் விட்டது. நிகழ்ச்சி முடிந்தும் இருவரும் ஒன்றாக சேரவில்லை என்பது வேறு கதை.

குப்பை கொட்டிய ஐஸ்வர்யா தத்தா

குப்பை கொட்டிய ஐஸ்வர்யா தத்தா

பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் ரன்னர் அப் ஆன நடிகை ஐஸ்வர்யா தத்தா சர்வாதிகாரி டாஸ்க்கில் நடிகர் தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டிய விவகாரம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்து விவாத பொருளாக பேசப்பட்டது. அந்த சீசன் முடிந்ததும் அந்த சர்ச்சையும் வழக்கம் போல அப்படியே மறக்கப்பட்டது.

BMW கார்

BMW கார்

தொடர்ந்து விஜய் டிவியில் ஏகப்பட்ட ஷோக்களை செய்து வரும் நடிகர் தாடி பாலாஜி புதிதாக BMW கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த காருக்கு முன்னால் நின்றபடி அவர் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் டிவி நண்பர்களும், சினிமா ரசிகர்களும் தாடி பாலாஜி சொகுசு கார் வாங்கிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X