'தல' டே: அஜீத் பிறந்தநாளில் ஜெயா டிவியில் ஆரம்பம், சன் டிவியில் வீரம்
சென்னை: அஜீத்தின் பிறந்தநாள் அன்று தொலைக்காட்சி சேனல்களில் ஆரம்பம், வீரம் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
அஜீத் குமாரின் பிறந்தநாள் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வருகிறது. அஜீத் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.
அஜீத் பிறந்தநாள் ஸ்பெஷல்களை பார்ப்போம்.

டிவி
அஜீத்தின் பிறந்தநாளை கொண்டாட தொலைக்காட்சி சேனல்களும் தயாராகிவிட்டன. மே 1ம் தேதி அஜீத் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

ஆரம்பம்
அஜீத் நடிப்பில் வெளியான ஆரம்பம் மற்றும் வீரம் ஆகிய படங்கள் வரும் மே 1ம் தேதி ஜெயா டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பபடவிருக்கின்றன.

அமர்க்களம்
15 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத், ஷாலினி ஜோடியாக நடித்த அமர்க்களம் படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு வரும் மே மாதம் 1ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

'தல' டே
அஜீத் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தலடே என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டாகவிட்டுள்ளனர். மேலும் தலடே ஃபேஸ்புக்கிலும் பிரபலமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











