'சன், ஜெயா'.. பாரபட்சமில்லாமல் தலை தீபாவளி கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ், சைந்தவி!

By Mayura Akilan

தமிழ் சினிமா உலகில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரத் தம்பதிகளில் முக்கியமானவர்கள் ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும்.

காதல் திருமணம், தயாரிப்பாளர் அவதாரம், ஹீரோவாக அரிதாரம் என்று இந்த ஆண்டு ஜி.வி.பிரகாஷுக்கு முக்கியமான ஆண்டு. இயக்குநர் பாலாவின் படம் உள்பட 8 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

சன்டிவி, ஜெயா டிவி என பிரபல சேனல்களில் இந்த ஜோடிதான் ஸ்பெசல் இன்டர்வியூ கொடுத்து அசத்தினர்.

இசையும் காதலும் என ஜெயா டிவியில் பேசிய இந்த ஜோடி சன் டிவியில் காலை நேரத்திலேயே தங்களின் தலை தீபாவளி கொண்டாட்டத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

எதிலும் ஜெயிப்பார்

எதிலும் ஜெயிப்பார்

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். அவருக்கு அப்போ மியூசிக் பிடித்த விஷயமா இருந்துச்சு. அதில் கவனம் செலுத்தினார். இப்போ தயாரிப்பாளர், ஹீரோ அவதாரங்களும் அவருக்கு பிடித்தே எடுத்திருக்கிறார். கண்டிப்பா இதிலும் வெற்றி பெறுவார்.

தலைத் தீபாவளி பரிசு

தலைத் தீபாவளி பரிசு

சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரிடம் அதை நானும் எதிர்பார்ப்பேன். ஆனால், அவருக்கு ரொம்ப நாட்கள் மறைத்து வைக்கத் தெரியாது. எது ஒன்றையும் வாங்கிய உடனே போன் செய்து சொல்லிடுவார். விசேஷ நாட்களில் மட்டும்தான் அவர் எனக்கு பரிசளிப்பார் என்று இல்லை. வெளியில் போகும்போது, ஒரு இடத்தில் பிடித்த ஒரு பொருளை பார்த்தால் உடனே வாங்கிக்கொடுத்து விடுவது அவர் வழக்கம்.

சந்தோசமான வாழ்க்கை

சந்தோசமான வாழ்க்கை

12 ஆண்டுகால காதல். இப்போ காதலிக்கத் தொடங்கியது மாதிரி இருக்கு. இவ்ளோ நாட்கள் ஓடினதே தெரியலை. என்னோட எல்லா வளர்ச்சியிலும் உடன் இருக்குறவங்க. ரெண்டு பேரின் சினிமா வாழ்க்கையும் ரொம்பவே சந்தோஷமா நகர்ந்துக்கிட்டிருக்கு.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

நிகழ்ச்சிக்கு வந்த சிறப்பு அழைப்பாளர்கள் பாடகர் பிரசன்னா, தொலைபேசியில் பேசிய ஏ.எல்.விஜய் ஆகியோர் தலைதீபாவளி கொண்டாட்ட ஜோடியை வாழ்த்தி பாராட்டி பேசினார்கள்.

அழும் மனைவி

அழும் மனைவி

தன்னுடைய மனைவி ரொம்ப சென்சிடிவ். எதற்கெடுத்தாலும் உடனே அழுதுவிடுவார் என்று கூறினார். ஆனால் ஜி.வி.பிரகாஷ் எதற்கும் கலங்கமாட்டார் என்று கூறினார் சைந்தவி.

செல்போன் செக்கிங்

செல்போன் செக்கிங்

என்னுடைய செல்போனை என் மனைவி செக் செய்வார் என்று கூறினார். ரொம்ப பொஸசிவ் என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து செல்லப் பெயர் வைத்து கூப்பிடுவேன் என்றும் சொன்னார்.

முத்தம் கொடுக்க தடை

முத்தம் கொடுக்க தடை

சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு தடை சொல்லாத சைந்தவி, கதாநாயகியை கட்டிப்பிடித்து நடிக்கவும், முத்தம் கொடுக்கவும் தடை சொல்லியிருப்பதாக சொன்னார்.

தமிழ் பேசும் தொகுப்பாளினி

தமிழ் பேசும் தொகுப்பாளினி

அழகான இந்த இசைத்தம்பதிகளை பேட்டி கண்ட ஜெயா டிவி தொகுப்பாளினி நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்தவராக இருந்திருந்தால் நிகழ்ச்சி இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X