Nila serial: ஆஹா... நிலாவால் காட்சிகளும் மாறியது தாலியும் மாறியது!

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில், நிலாவுக்கு அசோக்குக்கும் மறுதாலி கட்ட வேண்டிய விழாவில், நிலாவும், அசோக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் இருக்க, நிலாவின் கழுத்தை தாலி நெருங்கிக் கொண்டு இருக்க, அடுத்த நொடி காட்சி மாறியது..நிலாவின் கழுத்தில் ஏற
வேண்டிய தாலி, கொஞ்சம் நிலா பேசிய பின்னர் இப்போது ஸ்வேதாவின் கழுத்தில் ஏறி உள்ளது.

ஸ்வேதாவின் கழுத்தில் தாலி கட்ட மாட்டேன்,அவள் எனக்கு மனைவியாக முடியாது என்று சவால் விட்ட நீலாம்பரியின் மகன் சஞ்சய், இப்போது ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டிட்டான்.

நீலாம்பரிக்கு தவிர்க்க முடியாத சூழல், ஸ்வேதாவின் அப்பாவுக்கும், .அம்மாவுக்கும் பெரும் மகிழ்ச்சி. காரணம் தங்கள் பெண்ணை கெடுத்த சஞ்சய் தனது கையால் மக்களுக்கு தாலி கட்டினால் சந்தோஷமாக இருக்காதா?

அசோக்குக்கும் நிலாவுக்கும்

அசோக்குக்கும் நிலாவுக்கும்

ஹைதராபாத்தில் அப்பா,அம்மாவைத் தேடிப்போன நிலாவுக்கு, நீலாம்பரியின் தம்பி அசோக் உதவி செய்து, இருவருக்கும் கல்யாணம் ஆனது போல நடிக்க சம்மதிக்கிறான்.நீலாம்பரி இதை நம்பாமல் தனது கண் முன்னால் ,பிரஸ், மீடியா என்று வரவழைத்து,மறு தாலி காட்டும் சடங்கை நடத்த ஏற்பாடு செய்யறாங்க. இதனால், நிலாவுக்கும் ,அசோக்குக்கும் தர்ம சங்கடமாகுது. காரணம், நிலாவின் அப்பா அம்மாவை கண்டுபிடிக்க அவங்க வீட்டுக்கு பொய்யா மருமகளா வந்திருக்கா நிலா.

அசோக்கின் மனைவிக்கு

அசோக்கின் மனைவிக்கு

நிலாவின் அப்பாவோ,அசோக்கின் மனைவிக்கு மன நிலை சரியில்லை.அதற்கான வைத்தியத்தை பார்த்துக்கொண்டு இருக்கார். நிலாவின் அம்மாவும் அதே ஆஷ்ரமத்தில் அசோக்கின் மனைவி அஞ்சலிக்கு துணையாக இருந்தும், தமது கணவரைப் பார்க்கலை. இப்படி ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமலே கண்ணா மூச்சி ஆட்டம் போல எல்லாம் நடக்கிறது. நிலாவின் சொத்துக்களை அடையவே அவளை தனது மருமகளாக்கிக்க நீலாம்பரி நினைக்கறாங்க.

ஸ்ரீதர் உயிரோடு

ஸ்ரீதர் உயிரோடு

நிலாவின் அம்மா ரேவதியும், அப்பா ஸ்ரீதரும் உயிரோடு இல்லை.இப்போது நிலாவின் சொத்துக்களையும் அடைஞ்சுட்டா நாம் இன்னும் பெரிய ஆளா சமூகத்தில் பெரிய ஆளா வலம் வரலாம்னு நினைச்சுதான் இதெல்லாம் செய்யறாங்க.ஸ்ரீதரை ஒரு காலத்தில் நீலாம்பரி கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டு, அப்போதுதான் அவருக்கு கல்யாணமானது தெரிந்து அதிர்ச்சியாகித்தான் தான் ஸ்ரீதரை கொன்னுட்டதா நினைச்சுகிட்டு இருக்காங்க.

நிலா அசோக்

நிலா அசோக்

நிலாவின் காதலன் கார்த்திக்கும் இந்த நாடகத்துக்கு ஒத்துழைக்க, நிலா தனக்குத் தானே தாலி கட்டிக்கறா. அதனாலதான் இப்போ தன் கண் முன்னால் அசோக் நிலாவுக்கு மறு தாலி கட்டணும்னு கட்டளை போடறாங்க. இதை எப்படியாவது தவிர்க்கணும்னு நிலா நினைச்சுகிட்டு இருந்த நேரத்தில்தான் நிலா ரகசியமா ஏதோ சஞ்சய்க்கிட்டே சொல்லி மிரட்டி, தன் கழுத்தில் ஏற இருந்த தாலியை, தங்கை ஸ்வேதா கழுத்தில் ஏற விடறா.

இதுதான் நிலாவின் சாமர்த்தியத்தால் அவள் கழுத்தில் ஏற இருந்த தாலி, உண்மையை சஞ்சயால் கெட்டு போயிருந்த ஸ்வேதாவின் கழுத்தில் ஏறியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X