Naam iruvar namaku iruvar serial: உங்களுக்கு நல்ல மருமகளா இருப்பேன் அத்தை!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்தில் நடித்து வரும் இரட்டை வேடம் பற்றி ரொம்பவே பேசியாச்சு. ஆனால், இன்னிக்கு அசர வைத்த மாமியார் கௌரி பத்தி பேசியாகணும்.
கௌரி மகனாக வளர்ந்தவன்தான் அரவிந்த். அரவிந்தை தங்கள் மகனாக தத்து எடுத்து அழைச்சுட்டு போயி மும்பையில் வளர்க்கறாங்க. நல்ல பிள்ளையா மட்டும் இல்லை, டாக்டராகவும் ஆக்கிடறாங்க.
நல்ல பிள்ளையா அவனை சொந்த ஊருக்கு அழைச்சுட்டு வந்து, கொஞ்ச நாள் தங்கும் போதுதான் பெத்த அப்பாவுக்கே பிள்ளையை காமிக்கறாங்க. பெத்தவங்க வளர்த்த மாயன் படிக்காத பிள்ளையா வளர்ந்து இருக்கான்.

மாமியார் மருமகள்
அரவிந்தும் கல்யாணம் செய்து வைத்த பெண்தான் தாமரை. இருவருக்கும் கட்டாய கல்யாணம்தான் நடந்துச்சு.இதனால் மருமகள் தாமரையை மாமியார் கௌரிக்கு பிடிக்கலை.அரவிந்துக்கும் பிடிக்கலை. இது நாள் வரை இருவரும் சேர்ந்து வாழாமல் விவாகரத்துக்கு கேஸ் போட்டு இருக்காங்க. இப்போது கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது.

திருமண நாள்
அரவிந்த் தாமரைக்கு கல்யாணமாகி ஒரு வருடம் ஆச்சு. அதனால், கல்யாண நாளை கொண்டாட மாமனார் திட்டம் போடறார்.அவருக்கு சம்மதமும் சொல்லிடறான் அரவிந்த். ஆனால், விவாகரத்து கேஸ் கோர்ட்டில் இருக்கும் நிலையில் , இது சாத்தியமா என்று தாமரைக்குத் தெரியவில்லை. அதனால் மாமியாரிடமே கேட்டு விடலாம் என்று அத்தையிடம் பேச வருகிறாள் தாமரை.

ஏத்துக்குவீங்களா அத்தை
அத்தை எனக்கு ஒரு சந்தேகமிருக்கு... பேசலாமா அத்தைன்னு தாமரை கேட்க, என்ன சந்தேகம் கேளுன்னு சொல்றாங்க. வீட்டுல கல்யாண நாள் கொண்டாட ஏற்பாடுகள் நடக்குது. இதுவரைக்கும் என்னை நீங்க மருமகளா ஏத்துக்கலை. விவாகரத்து கேஸ் வேற கோர்ட்டில் இருக்கு. கல்யாண நாளை நான் மகிழ்ச்சியா கொண்டாடணும்னா நீங்கதான் அத்தை என்னை ஏத்துக்கிட்டீங்களான்னு சொல்லணும்னு சொல்றா.

உன்னை அரவிந்தும்
உன்னை பிடிக்காமல் போனதுக்கும் அரவிந்த்தான் காரணம். உன்னைப் பிடிச்சதுக்கும் அவன்தான் காரணம். அவனை நான் வளர்த்தவதான்... ஆனால், ஒரு வார்த்தை கடிந்து பேசியதில்லை. அப்படிப்பட்ட என் மகனை நீங்க ஆள் வச்சு அடிச்சு கடத்திகிட்டு வந்து கல்யாணம் செய்து வச்சீங்க. ஆனா, அவனுக்கு உன்னை பிடிச்சு இருக்கு.. உன்னைத்தான் அவன் ஆசையா என்கிட்டே கேட்டான். அவனுக்கு பிடிச்சது எனக்கும் பிடிக்கும்தானே. அதனால, உன்னை நான் ஏத்துக்கிட்டேன்.. என் ஆசிர்வாதம் உனக்கு உண்டு. சந்தோஷமா வேலையைப் பாருன்னு மாமியார் சொல்றாங்க.
நிச்சயமா உங்களுக்கு ஒரு நல்ல மருமகளா இருப்பேன் அத்தைன்னு சொல்றா தாமரை. இது நல்லாத்தான் இருக்கு இல்லை?


Click it and Unblock the Notifications











