அமீர் - பாவ்னிக்கு தகுதியில்லை. வம்பிழுத்த தாமரை செல்வி.. பாராட்டிய ரம்யா கிருஷ்ணன்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளது அமீர் -பாவ்னி ஜோடி.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவியின் அடுத்தடுத்த வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் இந்த சேனலின் முக்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி நிறைவடைந்தது. விரைவில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கடந்த சீசன்களை போலவே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக்பாசில் அமீர் -பாவ்னி

பிக்பாசில் அமீர் -பாவ்னி

இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் நேரடியாக கலந்துக் கொண்டார் பாவ்னி. அவர் தனது காதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து பகிர்ந்து அனுதாபத்தை அள்ளினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டில் பங்கேற்ற அமீர், பாவ்னியிடம் தனது காதலை தெரிவித்தார். ஆனால் இதுவரை அவரது காதலை பாவ்னி ஏற்கவில்லை.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

ஆனால் பல நிகழ்ச்சிகளிலும் வெளியிடங்களிலும் இவர்கள் சுற்றுவதும், அதன் புகைப்படங்களை பகிர்வதும், ஒருவருக்கொருவர் நெருக்கமாக போஸ் கொடுப்பதும் ரசிகர்களை இவர்களுக்குள் காதல் இருக்கிறதா இல்லை என்ற குழப்பத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அமீரை பொருத்தவரை தன்னுடைய காதலில் உறுதியாக உள்ளார்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

இவர்களுக்கு கடந்த சீசனில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவையடுத்து தற்போது இவர்கள் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்குள் இந்த நிகழ்ச்சியிலும் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்அவுட் ஆகி வருகிறது. சிறப்பான நடனத்தையும் இவர்கள் ரசிகர்களுக்கு தொடர்ந்து பரிசாக கொடுத்து வருகின்றனர்.

காதலை மீண்டும் சொன்ன அமீர்

காதலை மீண்டும் சொன்ன அமீர்

கடந்த வாரத்தில் நடைபெற்ற காதல் சுற்றில் மோதிரத்துடன் தன்னுடைய காதலை பாவ்னியிடம் வெளிப்படுத்தினார் அமீர். இந்த நிகழ்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இந்தக் காதலை ஏற்க பாவ்னி, சிறிது கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது.

அமீர் -பாவ்னியை வம்பிழுத்த தாமரை

அமீர் -பாவ்னியை வம்பிழுத்த தாமரை

அதில் புதிய டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதிச்சுற்றுக்கு தகுதியானவர்கள் யார், தகுதி இல்லாதவர்கள் யார் என்பதை கூறி அவர்கள் புகைப்படத்தில் கலர் பூச வேண்டும் என்பதே அது. இந்த நிகழ்ச்சியில் தற்போது தாமரைச்செல்வியும் பங்கேற்றுள்ள நிலையில், இறுதிச்சுற்றுக்கு தகுதி இல்லாதவர்கள் அமீர் மற்றும் பாவனி என்று அவர் கூறியுள்ளார்.

புதிய ப்ரமோ

புதிய ப்ரமோ

இதற்கான காரணம் ப்ரமோவில் இடம்பெறவில்லை. ஆனால் அவரது இந்த போல்டான முடிவுக்கு நடுவர் ரம்யா கிருஷ்ணன் பாராட்டு தெரிவிக்கிறார். இதையடுத்து அமீர் மற்றும் பாவ்னியின் முகம் மாறுவதையும் ப்ரமோ படம்பிடித்து காட்டுகிறது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததை வைத்து தாமரை இதுபோன்று நடந்துக் கொள்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றி

முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றி

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஷாரிக் மற்றும் அனிதா ஜோடி டைட்டிலை வெற்றிக் கொண்டது. அந்த நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பையடுத்தே தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X