அண்ணனே பாத்தியே பாடலுக்கு ஆட்டம் போட்ட தாமரைச்செல்வி.. கூட யார் ஆடுனா தெரியுமா?

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன் சீச்.. சீச்சி சீரணி என்ற பாடலை மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி, இதனை இணையவாசிகள் கொண்டாடினார்கள். அதை, தொடர்ந்து தூத்துக்குடி கொத்தனார் என்ற பாடலை பலரும் கேட்டு ரசித்தார்கள். தற்போது, தாய்லாந்து பாடலான அண்ணனே பாத்தியே என்ற பாடல் இணையத்தில் ஹிட்டாகி வருது, இதனை இணையவாசிகள் கொண்டாடி வரும் நிலையில, திரைப்பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு வருகின்றனர். அந்த வகையில் தாமரைச் செல்வி போட்ட ஆட்டத்தை பாருங்கள்.

சோசியல் மீடியாவில் எந்த பாட்டு எப்போது பிரபலமாகும் என்று சொல்ல முடியாது. இதில், ஒரு நல்ல விஷயம் என்னன்னா, உலகத்துல ஏதோ ஒரு நாட்டுல எப்பயோ போடப்பட்ட ஒரு பாடல், இப்போது மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி அந்த நாட்டினுடைய மரபையும், கலாச்சாரத்தையும் நாம தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்குது என்றால், உண்மையில் இசைக்கு மொழி முக்கியம் இல்லை என்பதை இந்த பாடல் மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறது. இணையத்தில் டிரெண்டாகி வரும் இந்த பாடல் உலகம் முழுவதும் தமிழ் பாடல் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இது தமிழ் பாடல் இல்லை.

Thamarai selvi iykki berry dance

அண்ணனே பாத்தியே: இளசுகளை ஆட்டம் போட வைத்து வரும் அண்ணனே பாத்தியே பாடல், தாய்லாந்து மொழியில் உருவான ஒரு நாட்டுபுற பாடல் ஆகும். இளசுகளின் காதலை சொல்லும் இந்த பாடல் 2015ம் ஆண்டு வெளியானது. அதன் பின் இந்த பாடல் 2019ம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஸ்டேஜில் பாடப்பட்டு அந்த நாட்டு மக்கள் இந்த பாடலை கொண்டாடினார்கள். இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இந்தோனேஷியாவில் இந்த பாடலை நிக்கேன் சேலன்ட்ரி பாடியதால், இந்த பாடலை அனைவரும் ரசித்தனர். இதைத்தொடர்ந்து, பிரபல இந்தோனேஷிய பாடகியான செல்வின் குமலசாரி, இந்த பாடலை பாடியது மட்டுமில்லாமல், இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடி இளசுகளை கவர்ந்துவிட்டார். அதன்பிறகு இந்த பாடலுக்கு உலகமே ஆட்டம் போட்டு வருகிறது.

Thamarai selvi iykki berry dance

செம ஆட்டம்: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி மற்றும் தனது கணவர் பார்த்த சாரதியுடன் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாக பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். நாடகக் கலைஞராக தெருக்கூத்துக்களில் நடனமாடிக் கொண்டிருந்த தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஒன்னுமே தெரியல என சொல்லியதால், பிக் பாஸ் போட்டியாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

Thamarai selvi iykki berry dance

தாமரைச்செல்வி: ஆனால், தாமரைச் செல்வியின் எதார்த்தமான பேச்சு, வெளித்தனம், தவறு என்றால், அதை சரியாக தட்டி கேட்டதால், மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து, முயற்சி செய்து கடைசி வாரம் வரை, துவண்டு போகாமல் விளையாடி ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை பிடித்தார்.. உழைத்தால் உயரலாம் என்பதற்கு உதாரணமாக தாமரை செல்விக்கு என்று ரசிகர்கள் கூட்டமே உண்டு, தற்போது தாமரைச் செல்வி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X