நடு ரோட்ல சேலையை மாத்தி மாத்தி கூலி பாட்டுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் தாமரை.. தீயாய் பரவுதே!

சென்னை: பிக் பாஸ் பிரபலமான தாமரை செல்வி நடு ரோட்டில் வித விதமான சேலைகளை அணிந்துக் கொண்டு ஆடும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற 5 மணி பஸ் ஷிவானி நாராயணன் எல்லாம் ஆட்டம் போடுவதை நிறுத்தி விட்டார்.

ஆனால், ஊர் ஊராக கணவருடன் ஜாலி ட்ரிப் அடித்து வந்த பிக் பாஸ் தாமரை தற்போது நடுரோட்டில் தாறுமாறாக ஆடி வருகிறார். சீக்கிரமே பெரிய டான்சராக மாறிடுவிங்க போல இருக்கு தாமரை என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Thamarai Selvi done a dance at road for Coolie Monica goes viral
Photo Credit:

தெருக்கூத்து கலைஞராக ரோடுகளில் ஸ்டேஜ் போட்டு நடித்து வந்த தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அவருக்குத்தான் டைடிட்ல் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் ஒரு பக்கம் சப்போர்ட் செய்தனர். ஆனால், அந்த சீசன் டைட்டிலை ராஜு ஜெயமோகன் தட்டிச் சென்றார். ரன்னர் அப் ஆக பிரியங்கா தேஷ்பாண்டே வந்தது குறிப்பிடத்தக்கது.

கார், வீடுன்னு கலக்குறாரு: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கூட தனக்கு கிடைத்த புகழை நடிகை ஓவியா, ஆரவ் உள்ளிட்ட பலர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியெல்லாம் சுத்த வேஸ்ட் என்றும் அதனால், முன்னேறியவர்கள் யாருமே இல்லை என்றும் கூறுபவர்களுக்கு, பதிலடியாக தாமரை செல்வி இருக்கிறார். பிக் பாஸுக்கு பிறகு கார், வீடுன்னு வாங்கி ஓஹோன்னு ஏகப்பட்ட இடங்களுக்கு கணவருடன் டூர் அடித்து ஜாலி செய்து வருகிறார்.

நீ கட்டும் சேல அழகுலதான்: பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்ற தாமரை செல்வி சின்னத்திரை தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாறி வரும் அவர் தொடர்ந்து ஏகப்பட்ட விளம்பரங்களையும் செய்து காசு பார்த்து வருகிறார். துணிக்கடை விளம்பரம் ஒன்றுக்காக வீட்டுக்கு வெளியெ வீதியில் வித விதமான சேலைகளை அணிந்துக் கொண்டு "நீ கட்டும் சேல அழகுலதான் மயங்கிப்போனேன் டி" பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டேவுடனே போட்டி: மேலும், சமீபத்தில், ரஜினிகாந்தின் கூலி படத்தில் பூஜா ஹெக்டே, செளபின் சாஹீர் நடனமாடிய அனிருத்தின் மோனிகா பாடலுக்கும் அவர் குழந்தை ஒருவருடன் சேலை அணிந்துக் கொண்டு நடனமாடிய வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். சேலையும் அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட் டிசைனும் ரொம்பவே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். தாமரை செல்விக்கு இன்ஸ்டாகிராமில் இதுவரை 2 லட்சத்துக்கும் குறைவான ஃபாலோயர்களே உள்ள நிலையில், அதை அதிகரிக்கும் விதமாக ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தனது கணவர் பார்த்த சாரதியுடன் சேர்ந்துக் கொண்டு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராகவும் இவர் மாறி ஏகப்பட்ட வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தாமரை செல்வியின் ரசிகர்கள் தொடர்ந்து அவரது வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X