ஆதியுடன் தொடர்பு..கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும் மோசமாக பேசிய பயில்வானை கிழித்த தாமரை செல்வி!
சென்னை: சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் ஆதிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கிற சூழலில், ஆதி மீது பண மோசடிப் புகார் கொடுத்தார் தாமரைச் செல்வி. நான் சின்ன மருமகள் சீரியலில் நடிக்கும் போது இருவருடன் நன்றாக பழகியதால், வீட்டுக்கு வருவார்கள். அவனை என் தம்பி மாதிரி பார்த்தேன் ஆனால், அவன் என்னை நம்ப வைத்து 3 சவரன் நகைய ஏமாற்றி விட்டான். அவன் ஒரு பக்கா ஃபிராடு. யூடியூபில் தேடிப் பார்த்தாலே இந்த நபர் எவ்வளவு பெரிய ஃபிராடு என்று தெரியும் அவன் மீது புகார் கூறியிருப்பதாக வீடியோவில் பேசி இருந்தார்.
தாமரைச்செல்வி: சமூக வலைத்தளங்களில் தாமரைச்செல்வி கூறிய புகார் வைரலானதை தொடர்ந்து, பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, தாமரைச்செல்வி மற்றும் உதவி இயக்குனர் ஆதிக் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இது பிரச்சனை ஆனதும் நகை ஏமாற்றிவிட்டான் என புகார் கூறி வருகிறார். மேலும், "தொடர்பு இல்லாத ஒருவரை ஏன் வீட்டில் தங்க வைக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பி, தாமரச்செல்வியை கடுமையாக விமர்சித்திருந்தார் பயில்வான் ரங்கநாதன்.

செருப்பால அடிப்பேன்: இதற்கு பதிலளித்த தாமரைச்செல்வி, தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஆவேசமாக பேசியுள்ளார். அதில், "நீ எல்லாம் மூத்த பத்திரிக்கையாளரா? பெண்ளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? டேய் கிழக்கு பயலே, அந்த ஆதி என் வீட்டுக்காரருக்கு கால் தூசிக்கு வருவனா? அவனுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்புனு எப்படி குற்றச்சாட்டு சொல்றீங்க?. "ஒரு பெண்ணை பற்றி எப்போதும் தவறாக பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்... உங்களுக்கு வெட்கமே இல்லையா? இப்படி பேசிவிட்டு அதில் வரும் பணத்திற்காக வாழ்வதற்குப் பதிலாக வேறு வேலையே செய்யலாம். டேய் கிழக்கு பயலே, உன்னை நான் சும்மாவே விடமாட்டேன். "நான் ஒரு கிராமத்து பெண்... ஒருநாள் உன்னை எங்காவது நேரில் பார்த்தால், எந்த இடமாக இருந்தாலும் செருப்பை கழட்டி அடிப்பேன் என பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டி உள்ளார் தாமரைச்செல்வி.


Click it and Unblock the Notifications











