ராதாவிற்கு பல கோடி சொத்து எப்படி வந்தது.. அந்தப்புர ரகசியம்.. தமிழா தமிழா பாண்டியன் சொன்ன தகவல்!
சென்னை: 80கால கட்டத்தில் தென்னிந்திய சினிமாவில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து முன்னணி நடிகையானவர் தான் நடிகை ராதா.முதல் படமே வெற்றிப் படமாகியதால், பின்பு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாத ராதாவின் சொத்து குறித்து Behind cinema யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.
அந்த பேட்டியில், நடிகை ராதா 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து இருக்கிறார், ராதா திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே அவரது சகோதரி அம்பிகா மிகப்பெரிய நடிகை. திருவனந்தபுரத்தை அடுத்த கல்லாறு பிறந்தவர்கள் தான் இவர்கள் இருவரும். அவர்களின் அம்மா, காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பேச்சாளர். இவருக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால், தங்களது மூன்று மகள்களையும் நடிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக பல முயற்சிகளை செய்தார். அப்படித்தான் முதன் முதலில் அம்பிகாவிற்கு நடிக்க வாய்ப்பு வந்தது.

நடிகை ராதிகா: அம்பிகாவிற்கு முதன் முதலில் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்ட போது, அவர்களின் வீட்டில் சரியான லைட் கூட இல்லை, அப்போது காரின் லைட்டை போட்டு அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதன் பிறகு தான் அம்பிகா சினிமாவில் நடிக்க வந்தார். இதைத்தொடர்ந்து தான் அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக ஒரு நடிகையை தேடிக்கொண்டு இருந்தார் பாரதிராஜா அந்த நேரத்தில் தான் ராதா போட்டோவை பார்த்து அவரை அந்த படத்தில் நடிக்க வைத்தார். அவரை சினிமாவில் நடிக்க வைக்கும் போது அவருக்கு வயது 15.
அதன் பிறகு ராதா அடுத்தடுத்த படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்திலும் சிவாஜி, ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாகி விட்டார். ராதாவிற்கு எங்கு என்ன பிரச்சனை வந்தாலும், அங்கு முன்னாடி நின்று தீர்த்துவைப்பது பாரதிராஜாவாகத்தான் இருக்கும் இதற்கான, தனது உதவியாளர் சித்ரா லட்சுமணனை ராதாவின் உதவியாளராக அனுப்பிவைத்து கடைசி வரை ராதாவை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் இன்று ராதாவிற்கு பல ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது.
ARS கார்டன் ரகசியம்: இந்த நேரத்தில் தான் ராதா, அம்பிகா, அவரது அம்மா மூவரும் எம்ஜிஆரைப் பார்த்து ஒரு ஸ்டூடியோ ஆரம்பிக்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை என்று சொன்னதும், எம்ஜிஆர் விருகம்பாக்கத்தில் 10 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. ARS கார்டன் உருவாக்கப்பட்டது. அதன் பக்கத்தில் இருக்கும் தெருவிற்கும் ARS தெரு என பெயர் வைக்கப்பட்டது.அதாவது அம்பிகா ராதா சரசம்மாள், சுதந்திர போராட்ட தியாகிக்கு கூட இப்படி பெயர் வைக்கப்படவில்லை. இதே போல திருவனந்தபுரத்திலும் ARS கார்டன் உள்ளது. இதுதான் ராதாவின் அம்மாவின் தொழில் சூட்சமம்.
பல ஆயிரம் கோடி சொத்து: இதையடுத்து ராஜசேகர் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதா. தம்பதிகளுக்கு இரண்டு மகள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் கார்த்திகா நாயர், அன்னக்கொடி என்கிற படத்தில் நடிக்க வைத்தார். இரண்டாவது மகள் துளசி நாயரையும் கடல் என்ற படத்தில் நடிக்க வைத்தார். ஆனால், ராதாவின் மகள் நடித்த படங்கள் பெரியதாக ஓடவில்லை. இப்போது ராதா பெரிய தொழிலதிபராக மாறிவிட்டார். இதில் ராதாவின் பெயரில் ஐந்து நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரெஸ்டாரண்ட், சினிமா, பள்ளிக்கூடம் என பல ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது. ராதாவின் ரோல் மாடல் ஜெயலலிதா, ஸ்ரீப்ரியா தான் என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











